PUBLISHED ON : டிச 03, 2012

இந்திய ராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களைத் தயாரிப்பதில் இந்தியன் ஆர்டினென்ஸ் பேக்டரி எனப்படும் இந்திய ஆயுதத் தொழிற்சாலை பெயர் பெற்றது. இந்த நிறுவனத்திற்கு இந்தியாவில் மொத்தம் 39 இடங்களில் தொழிற்சாலைகள் உள்ளன. தமிழ் நாட்டில் மட்டும் மொத்தம் 6 இடங்களில் இந்த ஆலை உள்ளது. இந்த நிறுவனத்தில் டிரேடு அப்ரெண்டிஸ் பிரிவில் உள்ள 2714 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:
இந்திய ஆயுதத் தொழிற்சாலையின் மேற்கண்ட டிரேடு அப்ரெண்டிஸ் பதவிகள் ஐ.டி.ஐ.,யில் படிக்காதவர்கள் மற்றும் ஐ.டி.ஐ.,யில் படித்தவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக உள்ளது. சார்ந்திருக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடுகிறது. ஐ.டி.ஐ., யில் படிக்காதவராக இருந்தால் பத்தாம் வகுப்பிற்கு நிகரான படிப்பை முடித்திருப்பதோடு கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் குறைந்த பட்சம் 40 சதவிகித மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஐ.டி.ஐ., படிப்பை முடித்தவர்களாக இருந்தால் என்.சி.டபிள்யூ., அல்லது எஸ்.சி.டபிள்யூ., அங்கீகாரம் பெற்ற படிப்பை அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முடித்திருக்க வேண்டும். இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 01.10.2012 அடிப்படையில் 22 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.ஏனைய விபரங்கள்:
4 ஆண்டு பயிற்சியை ஸ்டைபண்டுடன் சேர்த்து பெற முடியும் பணியாகும் இது. ஐ.டி.ஐ., முடித்தவராக இருந்தால் பயிற்சிக்கான கால அவகாச சலுகை உள்ளது. இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.30/-ஐ போஸ்டல் ஆர்டர் மூலமாக Sr.GM/GM என்ற பெயரில் தமிழ் நாட்டிலுள்ள 6 மையங்களில் ஏதாவது ஒன்றில் மாற்றத்தக்கதாக எடுக்க வேண்டும். விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு மூலமாக இந்தப் பணியிடங்கள் நிரப்பப்படும். விண்ணப்பங்களை சார்ந்துள்ள பகுதிக்கு ஏற்ற மையத்திற்கு அனுப்ப வேண்டும். முழுமையான விபரங்களைப் பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் :
17.12.2012விண்ணப்பங்கள் கிடைக்க இறுதி நாள் :
27.12.2012இணையதள முகவரி:
