/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு அரசு பணி
/
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு அரசு பணி
PUBLISHED ON : மார் 28, 2017

இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் பெரும்பாலும் எச்.ஏ.எல்., என்ற பெயராலேயே அறியப்படுகிறது. கர்நாடகாவின் பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு இயங்குகிறது. ஏரோனாடிக்ஸ் பிரிவில் பிரபலமானது.
இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள டெக்னீசியன் டிரெய்னி பணியிடங்களை நிரப்புவதற்கான அழைப்பினை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு பணி நியமனமாகவும் இந்த நியமனம் செய்யப்பட உள்ளது.
காலியிட விபரம்: இந்த நிறுவனத்தின் டெக்னீசியன் டிரெய்னி பதவியில் சானல் சி பிரிவில் 1 இடமும், சானல் பி பிரிவில் 3 இடங்களும் காலியாக
உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 38 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி., பிரிவினராக இருந்தால் 43 வயதுக்குள்ளும், ஓ.பி.சி.,
பிரிவினராக இருந்தால் 41 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: சானல் சி மற்றும் பி பிரிவிலான டெக்னீசியன் டிரெய்னி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பை முடித்துவிட்டு முழு நேரப் படிப்பாக என்.சி.டி., அல்லது என்.சி.வி.டி., படிப்பை டர்னர், கிரைண்டர், மெஷினிஸ்ட், பிட்டர் அல்லது பெயிண்டர் பிரிவில் முடித்திருக்க வேண்டும். பட்டப் படிப்பு முடித்தவர்களும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு விண்ணப்பிக்க முடியும். முழுமையான விபரங்களை இணையதளத்தைப் பார்த்து
அறியவும்.
தேர்ச்சி முறை: முதல் நிலை ஸ்கிரீனிங் தேர்வு அதன் பின்னர் எழுத்துத் தேர்வு போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி,உரிய இணைப்புகளைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். Chief Manager (HR) Recruitment Section, HR Department Hindustan Aeronautics Limited Corporate Office, 15/1 Cubbon Road Bangalore - 560 001.கடைசி நாள் : 2017 ஏப்., 28.
விபரங்களுக்கு: www.hal-india.com/

