/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு ஸ்டீல் நிறுவனத்தில் வேலை
/
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு ஸ்டீல் நிறுவனத்தில் வேலை
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு ஸ்டீல் நிறுவனத்தில் வேலை
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு ஸ்டீல் நிறுவனத்தில் வேலை
PUBLISHED ON : ஜூலை 11, 2017

ராஷ்ட்ரீய இஸ்பாட் நிகாம் லிமிடெட் என்பது விசாகப்பட்டினம் ஸ்டீல் நிறுவனம். இங்கு இன்ஸ்ட்ரூமென்டேஷன் பிரிவில் காலியாக உள்ள 19 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : விண்ணப்பதாரர்கள் 27 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும். இதன் பின்னர் என்.சி.வி.டி., அங்கீகாரம் பெற்ற ஐ.டி.ஐ., அல்லது இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை இன்ஸ்ட்ரூமென்டேஷன் டிரேடு பிரிவில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., படிப்பை இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் (மெக்கானிக்கல்) பிரிவுகளிலும், இன்ஜினியரிங் டிப்ளமோ படிப்பை இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன் ஆகிய பிரிவுகளிலும் முடித்தவர்கள் இந்த இடங்களுக்கு விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சி காலம்: 2 ஆண்டு
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு, நேர்காணல் ஆகிய முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் 300 ரூபாய். இதனை பாரத ஸ்டேட் வங்கி சலான் மூலமாக RINL Recruitment Account No. 30589461220 என்ற அக்கவுண்டில் செலுத்த வேண்டும்.
கடைசி நாள் : 2017 ஜூலை 31.
விபரங்களுக்கு : <https://www.vizagsteel.com/myindex.asp?tm=9&url=code/tenders/viewjobads.asp>

