/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., படிப்புக்கு இஸ்ரோவில் வேலை
/
ஐ.டி.ஐ., படிப்புக்கு இஸ்ரோவில் வேலை
PUBLISHED ON : மே 30, 2017

இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் பெயர் பெற்ற நிறுவனம்தான் ஐ.எஸ்.ஆர்.ஓ., எனப்படும் இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனிசேஷன். இந்த நிறுவனத்தில் தற்சமயம் டெக்னீசியன் மற்றும் டிராப்ட்ஸ்மேன் பிரிவுகளில் காலியாக இருக்கும் 74 இடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிடங்கள்: டெக்னீசியன் பி பிரிவில், எலக்ட்ரானிக் மெக்கானிக்கில் 22, எலக்ட்ரீசியனில் 14, பிட்டரில் 2, இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்கில் 4, கெமிக்கல் லேபரட்டரி அசிஸ்டென்டில் 1, மெஷினிஸ்டில் 6, மோட்டார் மெக்கானிக்கில் 2, பிளம்பரில் 1ம் காலியாக உள்ளன. சயின்டிபிக் அசிஸ்டென்டில் 3, ரெப்ரிஜிரேஷன் அண்டு ஏ.சி., யில் 4, சிவில் டிராப்ட்ஸ்மேனில் 6, டெக்னிகல் அசிஸ்டென்டில் 2, சயிண்டிபிக் அசிஸ்டென்டில் 5ம் சேர்த்து மொத்தம் 74 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: விண்ணப்பதாரர்கள் 18 - 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: பத்தாம் வகுப்பு முடித்துவிட்டு ஐ.டி.ஐ., படிப்பை தொடர்புடைய பிரிவில் முடித்திருக்க வேண்டும். ஐ.டி.ஐ., படிப்பு என்.ஏ.சி., என்.டி.சி., அங்கீகாரம் பெற்றதாக இருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு மற்றும் ஸ்கில் டெஸ்ட் வாயிலாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஜூன் 10.
விபரங்களுக்கு: www.nrsc.gov.in

