இன்ஜினியரிங் முடித்தவருக்கு வடிவமைப்பு நிறுவனத்தில் பணி
இன்ஜினியரிங் முடித்தவருக்கு வடிவமைப்பு நிறுவனத்தில் பணி
PUBLISHED ON : ஜூலை 21, 2026

அ நிறம் | அளவு
ஆந்திராவின் அமராவதியில் உள்ள தேசிய வடிவமைப்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விரிவுரையாளர் 4, டெக்னிக்கல் இன்ஸ்ட்ரக்டர் 4, பிரின்ஸ்பல் டிசைனர் 3, டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 3, அசிஸ்டென்ட் 2, அக்கவுன்ட் ஆபிசர் 1, உதவி நுாலகர் 1 உட்பட மொத்தம் 22 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ., / பி.டெக்.,
வயது: 18 - 35, 18 - 55 (28.7.2026ன் படி)
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 28.7.2026
விவரங்களுக்கு: nid.ac.in
