PUBLISHED ON : ஜன 14, 2013

இன்றைய நவீன உலகில் சாட்டிலைட் டெலிவிஷன்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த சானல்களின் எண்ணிக்கையுடன் இவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான சேவையாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக முக்கிய அங்கமாக இன்று தொலைக்காட்சி மாறியுள்ளது. இந்தியாவில் தொலைக் காட்சியின் ஆரம்பம் தூர்தர்ஷன் எனப்படும் அரசு சார்ந்த தொலைக் காட்சி வாயிலாகவே துவங்கியது. இன்றிருக்கும் கடும் போட்டிகளுக்கு மத்தியிலும் தரமான நிகழ்ச்சிகளை வழங்குவதில் அரசுத் துறை சார்ந்த தூர்தர்ஷனுக்கு பெரும் பங்கு உள்ளது. கேரள மாநிலத்தின் தூர்தர்ஷன் திருவனந்த புரத்தை தலைகையகமாகக் கொண்டு 1985 முதல் செயல்பட்டு வருகிறது. இதில் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் செய்தி அறிவிப்பாளர் பதவிக்கு ஆட்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.தேவைகள்:
திருவனந்தபுரத்திலுள்ள தூர்தர்ஷனில் செய்தி அறிவிப்பாளர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 வயது நிரம்பியவராகவும், 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். தேர்ந்து எடுக்கும் பிரிவுக்கான மொழியில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். ஒளிபரப்புக்குத் தகுந்த குரல் வளம், தோற்றம் பெற்றவராக இருக்க வேண்டும். நல்ல உச்சரிப்பு, மொழி ஆளுமை பெற்றிருக்க வேண்டும். பத்திரிக்கையியலில் அனுபவம், கல்வித்துறை சார்ந்த அனுபவம், தொலைக்காட்சி/வானொலியில் பணியாற்றிய அனுபவம், செய்தியின் போது நேர்காணல் செய்யும் திறன், செய்திகளை எழுதும் திறன் போன்றவை இருந்தால் முன்னுரிமை கிடைக்கும்.இதர தகவல்கள்:
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தங்கள் விண்ணப்பத்தை ஒரு தாளில் நிரப்பி பின்வரும் முகவரிக்கு 18.01.2013க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும். முழுமையான தகவல்களை பின்வரும் இணையதளத்தைப் பார்த்து அறியவும்.
முகவரி:
The Director (News),
Doordarshan Kendra,
Kadappanakkunnu (PO),
Trivandrum - 695043
Kerala.
விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் :
18.01.2013இணையதள முகவரி :
