PUBLISHED ON : ஜூலை 04, 2011

அ நிறம் | அளவு
வேலை வாய்ப்புகளை எப்போதும் தந்திடும் எண்ணெய் வள நாடான சவுதிஅரேபியாவில் அடுத்த சில ஆண்டுகளில் புதிய வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்படுவது கடினமாக மாறிவிடும் என வேலை வாய்ப்பு ஆலோசகர்கள் கருதுகின்றனர்.
எண்ணெய் வளமிக்க நாடான சவுதி அரேபியா இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாட்டினருக்கு எப்போதும் வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் நாடாக விளங்கி வருகிறது. ஆனால் அந்த நாட்டில் தற்போது நிலவிடும் மந்தமான பொருளாதாரச் சூழலால் அங்கு இயங்கிவரும் 4 நிறுவனங்களில் 3 நிறுவனங்களில் புதிய வேலைவாய்ப்புகள் மொத்தமாக நிறுத்தப்படவுள்ளது. இது அடுத்த 6 மாதங்களில் நிலவவுள்ள வேலை வாய்ப்புச் சூழல் என எதிர்பார்க்கப்படுகிறது.
