PUBLISHED ON : மே 25, 2015

நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப்படும் என்.டி.பி.சி., நிறுவனம் அனல் மின் துறையில் உலகப் பிரசித்தி பெற்ற ஒரு பொதுத் துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கேரள மையங்களில் காலியாக உள்ள 22 லேப் அசிஸ்டென்ட் காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேவைகள்: பி.எஸ்.சி., பட்டப் படிப்பை வேதியியல் பிரிவில் முடித்திருக்க வேண்டும். இதே போல் இன்டஸ்ட்ரியல் கெமிஸ்ட்ரி மற்றும் அப்ளைடு கெமிஸ்ட்ரி பிரிவில் பட்டம் முடித்தவர்களும் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க முடியும். இந்தத் தகுதியை 2014ஆம் ஆண்டிற்கு முன்னர் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
பயிற்சி மற்றும் ஸ்டைபண்டு விபரம்: தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்கள் என்.டி.பி.சி., யில் ஒரு வருட கால பயிற்சி மேற்கொள்ள வேண்டும். இப்பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.11 ஆயிரம் ஸ்டைபண்டாக வழங்கப்படும். வெற்றிகரமாக பயிற்சியை முடிப்பவர்களுக்கு லேப் அசிஸ்டென்ட் பதவி நிரந்தரமாக வழங்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்: என்.டி.பி.சி.,யின் மேற்கண்ட பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.300/-ஐ விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பங்களை ஆன்-லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க இறுதி நாள்: 15.06.2015
இணையதள முகவரி: http://www.ntpc.co.in/
