PUBLISHED ON : ஜூன் 03, 2026

ஜாதிக்காய் மரம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கூவம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.ஜெயந்தி கூறியதாவது:
கொய்யா, அத்தி உள்ளிட்ட பல்வேறு பழ செடிகள் மற்றும் மகோகனி, செம்மரம், குமிழ் தேக்கு உள்ளிட்ட பல வித மரச்செடி களை சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், ஜாதிக்காய் மரம் சாகுபடி செய்து வருகிறேன்.
இந்த மரம், செம்மண், வண்டல் மண், சவுடு மண் உள்ளிட்ட அனைத்து விதமான மண்ணிலும் வளரும் தன்மை உடையது.
குறிப்பாக, ஜாதிக்காய் மகசூல் துவக்க காலத்தில், காய்கள் அறுவடை செய்து ஊறுகாய்க்கு விற்பனை செய்யலாம். முதிர்வடைந்த ஜாதிக்காய்கள் உடைக்கும் போது, ஜாதிபத்திரி என்னும் இதழை பிரித்து எடுத்து விற்பனை செய்யலாம்.
மரம் வளர்ந்த பின், மரப்பலகை, ஜன்னல் உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்வதற்கு உபயோகப்படுத்தலாம்.
ஜாதிக்காய் சாகுபடியை பொறுத்த வரையில், பல்வேறு விதமான வருவாய்க்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.ஜெயந்தி,
94425 18127.
