/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., படிப்புக்கு எச்.ஏ.எல்., நிறுவனத்தில் வாய்ப்பு
/
ஐ.டி.ஐ., படிப்புக்கு எச்.ஏ.எல்., நிறுவனத்தில் வாய்ப்பு
ஐ.டி.ஐ., படிப்புக்கு எச்.ஏ.எல்., நிறுவனத்தில் வாய்ப்பு
ஐ.டி.ஐ., படிப்புக்கு எச்.ஏ.எல்., நிறுவனத்தில் வாய்ப்பு
PUBLISHED ON : மே 09, 2017

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 1940ல் இந்துஸ்தான் ஏர்கிராப்ட் கம்பெனி என்ற பெயரில் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் பின் நாட்களில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் என்ற பெயர் பெற்றது. விமானங்களுக்கு தேவைப்படும் பாகங்களைத் தயாரிப்பதில் இந்நிறுவனம் சிறப்பு பெற்றது. இந்த நிறுவனத்தின் நாசிக் மையத்தில் காலியாக உள்ள 500 டிரேடு அப்ரென்டிஸ் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலியிட விபரம்: பிட்டரில் 285, டர்னரில் 12, கார்பென்டரில் 6, மெஷினிஸ்டில் 15, வெல்டரில் 20, எலக்ட்ரீசியனில் 63, மோட்டார் வெகிக்கிள் மெக்கானிக்கில் 8, டிராப்ட்ஸ்மேனில் 10, எலக்ட்ரானிக்ஸ் மெக்கானிக்கில் 4, பெயின்டரில் 12, பாசாவில் 65 இடங்கள் காலியாக உள்ளன.
கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக தொடர்புடைய பிரிவில் ஐ.டி.ஐ., படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் இந்த இடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க: கீழே கொடுக்கப்பட்டுள்ள இணையதளத்திற்கு சென்று பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பெற வேண்டும். பின்னர் அதனை முழுமையாக நிரப்பி, உரிய இணைப்பு களைச் சேர்த்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 மே 15.
விபரங்களுக்கு: http://www.apprenticeship.gov.in/Pages/Apprenticeship/ApprenticeRegistration.aspx

