PUBLISHED ON : ஆக 13, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலையில் (ஐ.எம்.யு.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அசிஸ்டென்ட் 15, அசிஸ்டென்ட் (நிதி) 12 என மொத்தம் 27 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: அசிஸ்டென்ட் பிரிவுக்கு ஏதாவது ஒரு பட்டப்படிப்பு, நிதி பிரிவுக்கு வணிகவியல், கணிதம், புள்ளியியல் பிரிவில் டிகிரி தேவைப்படும்.
வயது: 18 - 35 (30.8.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 1000. எஸ்.சி.,/எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 700
கடைசிநாள்: 30.8.2024
விவரங்களுக்கு: imu.edu.in