/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தேனா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவி
/
தேனா வங்கியில் புரொபேஷனரி அதிகாரி பதவி
PUBLISHED ON : ஏப் 25, 2017

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான தேனா வங்கி 1969ல் தேசியமயமாக்கப்பட்ட 13 வங்கிகளில் ஒன்றாகும்.
தொடர்ந்து சிறந்த சேவையாற்றி வரும் தேனா வங்கியும் அமிதி பல்கலைக் கழகமும் இணைந்து அந்த வங்கியில் 300 புரொபேஷனரி அதிகாரிகளைப் பணி நியமனம் செய்வதற்கான படிப்பு குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.
வயது: விண்ணப்பதாரர்கள் 20 - 29 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக குறைந்த பட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: ஆன்லைன் முறையில் நடத்தப்படும் அப்ஜெக்டிவ் மற்றும் டெஸ்கிரிப்டிவ் தேர்வுகளை எதிர்கொண்டு வெற்றி பெற வேண்டும். இதன் பின்னர் குழு விவாதம் மற்றும் நேர்காணல் முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க: விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 மே 9.
தேர்வு நாள்: 2017 ஜூன் 11.
விபரங்களுக்கு: www.denabank.com

