PUBLISHED ON : ஏப் 29, 2026

சிவப்பு கவுனி அரிசி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம், நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ. கங்காதரன் கூறியதாவது:
களிமண் நிலத்தில், சிவப்பு கவுனி ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இது, தட்பவெப்ப சூழலை பொறுத்து, 135 நாளில் விளைச்சல் கொடுக்கும் நெல் பயிராகும். இளம் நாற்றாக இருக்கும் போது, 22 நாட்களுக்குள் நடவு செய்து விட வேண்டும். நடவிற்கு பின், களை எடுப்பது, இயற்கை உரம் போடுவது உள்ளிட்ட பராமரிப்புக்கு பின், அறுவடை செய்யலாம். சிவப்பு கவுனி நெல் ரசாயன உரங்கள் இன்றி சாகுபடி செய்யும் போது, மகசூல் குறைவாக இருந்தாலும், அதை அரிசியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது நல்ல வருவாய் ஈட்ட முடியும். குறிப்பாக, ஆன்டி ஆக்ஸிடன்ட்களைக் கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது. தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகிறது. எடை மேலாண்மை, இதய ஆரோக்கியம் மற்றும் ரத்த சோகையைத் தடுப்பது போன்ற பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் உணவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு:நீலபூ.கங்காதரன், 96551 56968.
