PUBLISHED ON : ஆக 22, 2017
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் (ஐ.சி.டி.எஸ்.,) கீழ் உள்ள 21 வட்டாரங்களில் காலியாக உள்ள அங்கன்வாடி பணியாளர்கள், குறு அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி உதவியாளர்களை வட்டார வாரியாகப் பணி நியமனம் செய்ய மொத்தம் 1605 இடங்கள் இனச்சுழற்சி, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அற்றவர்கள் என்ற அடிப்படையில் நிரப்பப்படுவதற்கு தகுதி உடையவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வயது : அங்கன்வாடி மற்றும் குறு அங்கன்வாடி பணியாளர்கள் பிரிவுகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 25 முதல் 35 வயதும், அங்கன்வாடி உதவியாளர்கள் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 முதல் 40 வயது உடையவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கன்வாடி மற்றும் குறுஅங்கன்வாடி பதவிகளுக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். மலைவாழ் மக்களாக இருந்தால் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி தேவைப்படும். அங்கன்வாடி உதவியாளர்கள் பதவிக்கு எழுத, படிக்க தெரிந்து இருக்க வேண்டும். இவற்றுடன் சில இதர தேவைகளும் உள்ளன என்பதால் முதலில் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை www.tirunelveli.nic.in என்ற இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து, முழுமையாக நிரப்பி, உரிய இணைப்புகளுடன் சேர்த்து அந்தந்த குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தில் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
கடைசி நாள் : 2017, ஆக.௨௮
விபரங்களுக்கு : www.tirunelveli.nic.in/anganwadi.htm>

