தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/விண்வெளி ஆய்வு மைய பணிவாய்ப்பு

விண்வெளி ஆய்வு மைய பணிவாய்ப்பு

விண்வெளி ஆய்வு மைய பணிவாய்ப்பு


PUBLISHED ON : ஜூலை 11, 2011

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 11, 2011


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஸ்ரீஹரிகோட்டா என்ற இடத்தில் சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டர் அமைந்துள்ளது. சென்னையிலிருந்து 80 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ள இந்த விண்வெளி ஆய்வு மையம் கிழக்கு ஆந்திர கடற்கரை ஓரம் அமைந்துள்ள ஒரு தீவில் உள்ளது. ஐ.எஸ்.ஆர்.ஓ.,வின் முன்னாள் தலைவர் சதீஷ் தவானை கவுரவிக்கும் விதமாக 2002ல் இந்தப் பெயரைப் பெற்றது என்ற போதும் 1969லேயே இந்த நிறுவனத்தை நிறுவுவதற்கான அடித்தளமிடப்பட்டு விட்டது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் 32 காலி இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

என்னென்ன பிரிவுகள்: சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரில் டெக்னிகல் அசிஸ்டெண்ட் பிரிவில் எலக்ட்ரானிக்ஸ் அண்டு கம்யூனிகேஷன், மெக்கானிகல், ஆட்டோமொபைல், இன்டஸ்ட்ரியல் சேப்டி, கெமிக்கல், போட்டோகிராபி ஆகிய இடங்களும், சயின்டிபிக் அசிஸ்டெண்ட் பிரிவில் மூன்று பிரிவுகளிலும், ஜூனியர் இந்தி டிரான்ஸ்லேட்டர் பிரிவிலும் பதவிகள் நிரப்பப்பட உள்ளன. முழுமையானவிபரங்களை அறிய இந்த நிறுவனத்தின் இணையதளத்தைப் பார்க்கவும்.

தேவை என்ன: டெக்னிகல் அசிஸ்டண்ட் பதவிகளுக்கு தொடர்புடைய துறையில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக முதல் வகுப்பு தேர்ச்சியுடன் கூடிய டிப்ளமோ படிப்பு தேவை. சயின்டிபிக் அசிஸ்டன்ட் பதவிக்கு பி.எஸ்.சி., பட்டப்படிப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆகிய பிரிவுகளில் முதல் வகுப்புடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பிரிவு வாரியாக கல்வித் தகுதி தேவை என்பதால் கட்டாயம் இணைய தளத்தைப் பார்க்கவும்.இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிரம்பியவராகவும், 35 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.

இதர தகவல்கள்: இந்தப் பதவிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும் என்று தெரிகிறது. சதீஷ் தவான் ஸ்பேஸ் சென்டரின் பணி இடங்களுக்கு ஆன்-லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் விண்ணப்பத்தை போதுமான காப்பிகள் எடுத்துக் கொள்ளவும். ஒரு காப்பியுடன் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், சான்றிதழ் நகல்களின் அட்டெஸ்ட் செய்யப்பட்ட பிரதிகள் போன்றவற்றை இணைத்து பின் வரும் முகவரிக்கு 25.07.2011க்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள் : 18.07.2011

விண்ணப்பங்கள் சென்றடைய இறுதி நாள் : 25.07.2011

இணையதள முகவரி : http://www.shar.gov.in/Tech/advt.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us