PUBLISHED ON : மே 13, 2026

மா சாகுபடியில், சிதைவு நோய் தடுப்பு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி நிலைய, பயிர் வினையியல் இணைப் பேராசிரியர் சி. தமிழ்ச்செல்வி கூறியதாவது:
மா சாகுபடியை பொறுத்தவரையில், பூஞ்சை தொற்று, பூச்சி தாக்கம் உள்ளிட்ட பல்வேறு நோய் தாக்கம் ஏற்படும். இதுபோன்றவற்றை கட்டுப்படுத்தினால், மா சாகுபடியில் நல்ல வருவாய் ஈட்ட முடியும். மா மரங்களில், மா சிதைவு நோய் தாக்கம் ஏற்படும்.
குறிப்பாக, மா மரத்தில் பூக்கள் பூக்கும் போது, பிஞ்சுகள் உதிர்ந்துவிடும். மா மரத்தின் வளர்ச்சி மெதுவாக வளரும். சில நேரங்களில், மா கிளைகளின் வளர்ச்சி மெலிந்து காணப்படும்.
இதை தடுக்க, நோய் தாக்கிய மெல்லிய கிளைகளை அகற்ற வேண்டும். மேலும், நாப்தலின் அசிட்டிக் அமிலம் தெளிக்க வேண்டும். ஒரு லிட்டர் தண்ணீரில், கிராம் கார்பென்டாசிம் கலந்து தெளிக்க வேண்டும். கரைசல் மேலாண்மையை முறையாக கையாண்டால், மா சிதைவு நோயை தடுக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சி.தமிழ்ச்செல்வி98408 60957
