/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
இந்திய கப்பல் படையில் ஆசிரியர் பணியிடங்கள்
/
இந்திய கப்பல் படையில் ஆசிரியர் பணியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 04, 2017

சர்வதேச அளவில் பிரசித்தி பெற்ற நமது நாட்டின் கப்பல் படை தொழில்நுட்ப ரீதியாகவும், அர்ப்பணிப்பு உடைய வீரர்களுக்காகவும் சிறந்து விளங்குகிறது.
இப்படையில் பணிபுரிவது பெருமைக்குஉரிய ஒன்றாகவே கருதப்படுகிறது. இந்தப் படையில் எஜூகேஷன் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பிரிவுகளில் காலியாக உள்ள இடங்களை நிரந்தர நிலை அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பிரிவுகள் மற்றும் காலியிட விபரம்: எஜூகேஷன் சார்ந்த இடங்களில் எம்.எஸ்சி., படிப்பில் இயற்பியல், கணிதம் மற்றும் வேதியியலில் தலா 4 இடங்கள் உள்ளன. எம்.ஏ., படிப்பில் ஆங்கிலம் மற்றும் வரலாறில் தலா 2 இடங்கள் உள்ளன. லாஜிஸ்டிக்ஸ் சார்ந்த இடங்களில் பி.இ., பி.டெக்., எம்.பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.எஸ்சி., ஐ.டி., எம்.சி.ஏ., எம்.எஸ்சி., ஐ.டி., ஆகிய பிரிவுகளில் மொத்தம் 14 இடங்கள் உள்ளன.
வயது: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் 02.01.1993க்கு பின்னரும், 01.07.1998க்கு முன்னரும் பிறந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: விண்ணப்பிக்கும் பிரிவுக்கு ஏற்றபடி மேலே குறிப்பிடப்பட்ட ஏதாவது ஒரு படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உடல் தகுதி: ஆண்கள் குறைந்தபட்சம் 157 செ.மீ.,யும், மகளிர் குறைந்தபட்சம் 152 செ.மீ.,யும் உயரம் கொண்டிருக்க வேண்டும். இதற்கு நிகரான எடையும் கொண்டிருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: இந்தப் பதவிகளுக்கு வரும் விண்ணப்பங்கள் தகுதி அடிப்படையில் பரிசீலிக்கப்பட்டு எஸ்.எஸ்.பி., இண்டர்வியூ முறையில் தேர்ச்சி செய்யப்படுவார்கள். இந்த நேர்காணலானது தமிழகத்தில் கோவையில் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
கடைசி நாள்: 2017 ஏப்., 20.
விபரங்களுக்கு: http://epaper.tribuneindia.com/1155400/The-Tribune/TT_01_April_2017#page/11/2

