/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு டெக்னிக்கல் வேலை
/
ஐ.டி.ஐ., படித்தவர்களுக்கு டெக்னிக்கல் வேலை
PUBLISHED ON : ஜூலை 18, 2017
நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது என்.எச்.பி.சி., என்ற சுருக்கமான பெயரால் அறியப்படுகிறது. பொதுத்துறை சார்ந்த மினிரத்னா நிறுவனமான இது, 1975ல் நிறுவப்பட்டது. இந்நிறுவனத்தில் காலியாக உள்ள 13 டெக்னிக்கல் அப்ரென்டிஸ் பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள் : எலக்ட்ரீசியன், மெக்கானிக், வெல்டர் மற்றும் பிட்டரில் தலா 2, வயர்மேன், பிளம்பர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர், பம்ப் ஆபரேட்டர், மெஷின்ஸ்ட் ஆகிய பிரிவுகளில் தலா ஒரு இடமும் என ௧௩ காலியிடங்கள் உள்ளன.
வயது : விண்ணப்பிக்க விரும்புவர்கள் 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பில் தேர்ச்சியுடன் ஐ.டி.ஐ., படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மூலமாக தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை உரிய இணைப்புகளுடன் பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
NHPC Limited, Rangit Power Station, Sikkim-11.
கடைசி நாள் : 2017 ஜூலை 28.
விபரங்களுக்கு : www.nhpcindia.com/Default.aspx?id=128&lg=eng

