sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை


PUBLISHED ON : பிப் 07, 2017

Google News

PUBLISHED ON : பிப் 07, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

47) வேதங்களில் ஐந்து முகங்களில் தோன்றிய ஆகமங்களின் எண்ணிக்கை

1) 18 2) 24 3) 26 4) 28


அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி

இ) 3-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி

48) பௌத்த சமயத்தின் மத்தியாமிகா வகுப்பின் நிறுவனர்

அ) புத்தர் ஆ) ரிஷபர் இ) வர்த்தமானர் ஈ) நாகார்கனா

49) சத்காரிய வாதத்தின் இரு வேறு வகைகள்

அ) பரிணாம வாதம், விவர்த்த வாதம்

ஆ) பரிணாம வாதம், அநேகாந்த வாதம்

இ) பரிணாம வாதம், சூன்ய வாதம்

ஈ) அநேகாந்த வாதம், சூன்ய வாதம்

50) ராமேஸ்வரத்தில் உள்ள உபதீர்த்தங்களின் எண்ணிக்கை

அ) 27 ஆ) 28 இ) 30 ஈ) 29

51) ஸ்ரீவைணவ சம்பிரதாயத்தை நிறுவியவர்

அ) ராமானுசர் ஆ) வல்லபர் இ) மத்துவர் ஈ) நாதமுனி

52) பொருத்துக

இடம் - பெயர்

அ) காசி - 1) கரும்பாய்

ஆ) பண்டரிபுரம் - 2) சீலாபாய்

இ) ஜெகனாதபுரம் - 3) ராமாபாய்

ஈ) குஜராத் - 4) ஜனாபாய் குறியீடுகள்


அ ஆ இ ஈ

அ) 4 2 1 3

ஆ) 3 4 1 2

இ) 1 3 2 4

ஈ) 2 4 1 3

53) மாவீரன் அலெக்சாண்டருடன் சம்பந்தபட்ட இந்து பண்டிகை எது?

அ) விஜயதசமி ஆ) சங்கராந்தி

இ) ரக் ஷாபந்தன் ஈ) விநாயகர் சதுர்த்தி

54) வேதகால கடவுள்கள், அண்டத்தின் ஒழுங்கை மட்டும் அல்லாமல் வேறுபாதுகாவலராகவும் பார்க்கப்படுகின்றவை:

1) வேதவிதிகள் 2)அற ஒழுங்கு 3) அறவிதி 4) விதி, ஒழுங்கு

இதில் எது சரி


அ) 1-மட்டும் சரி ஆ) 3-மட்டும் சரி

இ) 2-ம் மற்றும் 3-ம் சரி ஈ) 4-மட்டும் சரி

55) ஆன்மா முக்தி நிலையை அடைவதற்கான வழிமுறையைப் பெற விலக்க வேண்டியது

1) அனந்தம் 2) மனை 3) பிரையஸ் மற்றும் ஸ்ரையஸ் 4) அனைத்து ஆசைகளும்

இதில் எது சரி


அ) 4-மட்டும் சரி ஆ) 3-ம் 1-ம் சரி

இ) 2-ம் மற்றும் 3-ம் சரி ஈ) 3-மட்டும் சரி

56) ஆகமத்தைச் சார்ந்த கீழ்வரும் கூற்றாவன “ஆகமங்கள் குறிப்பாக இறையருள் பெற்றவர்களுக்கு அருளப்பெற்றது. அது வேத வேதாங்களின் உண்மைகளை உள்ளடக்கியது ஆகும்”. மேற்கண்ட கூற்று யாரால் கூறப்பட்டது ?

அ) மெய்கண்டார் ஆ) திருமூலர்

இ) மாணிக்கவாசகர் ஈ) உமாபதி

விடைகள்: 47.ஈ 48.ஈ 49.அ 50.ஆ 51.ஈ 52.ஆ 53.இ 54.ஆ 55.ஈ 56.அ

தொடரும்






      Dinamalar
      Follow us