sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வேலை வாய்ப்பு மலர்

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

/

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை

டி.என்.பி.எஸ்.சி. வினா - விடை


PUBLISHED ON : மார் 07, 2017

Google News

PUBLISHED ON : மார் 07, 2017


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

91. போகிப் பண்டிகை கொண்டாடுவதின் நோக்கம்

அ) மார்கழி மாத இறுதி நாள் என்பதற்காக

ஆ) பழையவற்றை கழித்தல்

இ) மழைக்கொடுத்த இறைவனைப் போற்றுதல்

ஈ) துாய்மை அடையும் விதமாக

92. 'ஸ்ரீகிருஷ்ணாஷ்டமி' திருநாளை மற்றொரு பெயராலும் அழைக்கலாம்

அ)ஜென்மாஷ்டமி ஆ) பூர்வாஷ்டமி இ) உத்ராஷ்டமி ஈ) காலாஷ்டமி

93. மகாசிவராத்திரி பண்டிகை எதன் நினைவாக கொண்டாடப்படுகிறது

அ) பார்வதி சிவபெருமானின் திருமண நாளாக

ஆ) சிவபெருமான் அசுர வதம் செய்தமைக்காக

இ) சிவபெருமான் அவதாரம் எடுத்ததிற்காக

ஈ) பார்வதிக்கு சிவபெருமான் ஞானம் கற்றுக்கொடுத்த தினமாக

94. மகிடாசூரன் கொல்லப்பட்டதின் நினைவாகக் கொண்டாடப்படும் பண்டிகை எது?

அ) தனுார்மாத நவராத்திரி ஆ) சரவண நவராத்திரி

இ) வசந்த நவராத்திரி ஈ) சதுர்மாத நவராத்திரி

95. இவற்றில் எது முக்குண புராணம் என்று குறிப்பிடப்படுகிறது

I. மத்ஸ்ய புராணம், கூர்ம புராணம், கந்த புராணம்

II. சாத்வீகப் புராணம், இராஜஸபுராணம், தாமஸ புராணம்

இதில் எது சரி

அ) I -மட்டும் சரி ஆ) II மட்டும் சரி

இ) I மற்றும் II சரி ஈ) இவற்றில் எதுவுமில்லை

96. இதிகாசத்தில் அமைந்துள்ள கருப்பொருள்

அ) பகவத்கீதை செய்திகள்

ஆ) உபநிடதக் கருத்துகள்

இ) ஐதீகத்தை நிரூபணம் செய்யும் வரலாறு

ஈ) இவற்றில் எதுவுமில்லை

97. இதிகாசங்களின் சுவை என்ன?

அ) துரியோதனன் நேர்மையாக கதை யுத்தம் செய்தான்

ஆ) இராமாயணத்தில் வாலியை மறைந்து நின்று இராமர் அடித்தது

இ) பீமன் சண்டையில் தப்பு செய்தது

ஈ) இவற்றில் எதுவுமில்லை

98. ஆகமங்களில் தச காரியங்களுக்கு இலக்கணம் கூறப்பட்ட பாதங்களின் பெயர்கள்

1) சரியா, கிரியா பாதங்கள்

2) சரியா, கிரியா யோக பாதங்கள்

3) ஞான பாதம்

4) சரியா, கிரியா, யோக, ஞான பாதங்கள்

இதில் எது சரி

அ) 1-மட்டும் சரி ஆ) 2-மட்டும் சரி இ) 3-மட்டும் சரி ஈ) 4-மட்டும் சரி

99. எந்த தெய்வத்தை எத்தனை முறை சுற்றலாம் ? சரியான இணையைத் தேர்க

I. விநாயகர் - ஒரு சுற்று II. சூரியன் - மூன்று சுற்று

III. சிவன் - நான்கு சுற்று

இதில் எது சரி

அ) I சரி ஆ) II சரி இ) III சரி ஈ) அனைத்தும் தவறு

100. விநாயகரின் ஆயுதங்கள் எத்தனை ?

I. 29 II. 30 III. 5 IV. 12

அ) I சரி ஆ) II சரி இ) IIII சரி ஈ) IV சரி

101.வைஷ்ணவர்களை பொறுத்தவரை வேதத்திற்கு இணையானது மற்றும்'தமிழ் வேதம்' என்று அழைக்கப்படுவது

அ) பிரபந்தம் ஆ) வைக்கானஸ ஆகமம்

இ) திருவாய்மொழி மற்றும் பிரபந்தம் ஈ) திருப்பாவை

102.பொருத்துக

அ) லேக்ஹா 1) வரைகலை மற்றும் ஓவியக்கலை

ஆ) ரூப்பா 2) கணிதவியல்

இ) காணன் 3) வாசித்தல் மற்றும் எழுதுதல்

ஈ) சம்சக்ரிடி 4) கணக்கிடுதல் மற்றும் வடிவியல்

அ ஆ இ ஈ

அ) 3 1 4 2

ஆ) 3 4 2 1

இ) 3 2 4 1

ஈ) 4 2 3 1

விடைகள்: 91.இ 92.அ 93.அ 94.ஆ 95.ஆ 96.இ 97.ஆ 98. ஈ 99. அ 100.அ 101. இ 102. அ

தொடரும்






      Dinamalar
      Follow us