/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியாளர் பதவி
/
அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பயிற்சியாளர் பதவி
PUBLISHED ON : ஜூலை 25, 2017

கவுன்சில் ஆப் சயின்டிபிக் அண்டு இன்டஸ்ட்ரியல் ரிசர்ச் எனப்படும் சி.எஸ்.ஐ.ஆர்., மையம் இந்தியாவின் பிரசித்தி பெற்ற அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களுள் ஒன்று. பல்வேறு இடங்களில் இந்த மையத்திற்கு கிளைகள் உள்ளது. இதன் சென்னை மையத்தில் டெக்னீசியன் அப்ரென்டிஸ்/கிராஜூவேட் அப்ரென்டிஸ் காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.
தேவைகள் : டெக்னீசியன் அப்ரென்டிஸ் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் கம்ப்யூட்டர் இன்ஜினியரிங், இன்பர்மேஷன் டெக்னாலஜி, சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரிகல் அண்டு எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், மெக்கானிகல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், எலக்ட்ரானிஸ் அண்ட் இன்ஸ்ட்ரூமென்டேஷன் ஆகிய இன்ஜினியரிங் பிரிவுகள் ஏதாவது ஒன்றில் டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும். கிராஜூவேட் இன்ஜினியரிங் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இ அண்டு ஐ., இ.சி.இ., இ.இ.இ., சி.எஸ்., ஐ.டி., ஆகிய ஏதாவது ஒரு பிரிவில் இன்ஜினியரிங் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
உதவிதொகை : மேற்கண்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டால் மாதம் ரூ.7500/- ஸ்டைபண்டாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்ச்சி முறை : நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: வரும் 28.7.2017 அன்று உரிய ஆவணங்களுடன் சென்னையிலுள்ள சி.எஸ்.ஐ.ஆர்., வளாகத்தில் நேரடியாக நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.
கடைசி நாள் : 2017 ஜூலை 28.
விபரங்களுக்கு : www.csircmc.res.in/careers.html

