தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மருத்துவ அதிகாரி பணிவாய்ப்பு

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மருத்துவ அதிகாரி பணிவாய்ப்பு

யு.பி.எஸ்.சி., அறிவித்துள்ள மருத்துவ அதிகாரி பணிவாய்ப்பு


PUBLISHED ON : ஜன 28, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜன 28, 2013


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவின் மத்திய அரசுப் பணி இடங்களை நிரப்புவதில் யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் செயல்பட்டு வருகிறது. புதுடில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் இந்த அமைப்பின் சார்பாக 39 மருத்துவ அதிகாரிகளையும், 57 அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் (சென்ட்ரல்)/அசிஸ்டன்ட் காலி இடங்களையும் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வந்துள்ளது.

தேவைகள்:



யு.பி.எஸ்.சி.,யின் மருத்துவ அதிகாரிகள் மற்றும் அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். மெடிக்கல் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் 3வது ஷெட்யூலின் 2ம் பகுதியின் முதல் அல்லது 2வது ஷெட்யூலின் கீழ் மருத்துவ தகுதி பெற்றிருக்க வேண்டும். முழுமையான விபரங்களை இணையத்திலிருந்து அறியவும்.

அசிஸ்டன்ட் லேபர் கமிஷனர் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் மூலமாக ஏதாவது ஒரு பிரிவில் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். சோசியல் ஒர்க், லேபர் வெல்பேர், இண்டஸ்ட்ரியல் ரிலேஷன்ஸ், பெர்சனல் மேனேஜ்மென்ட், லேபர் லா சட்டம் போன்ற ஏதாவது ஒரு பிரிவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக டிப்ளமோ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

மற்றவை:



யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வெளியிட்டுள்ள ஜூனியர் சயின்டிபிக் ஆபிசர் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.25/-ஐ ஏதாவது ஒரு ஸ்டேட் வங்கிக் கிளையிலோ அல்லது நெட் பாங்கிங் முறையிலோ செலுத்த வேண்டும். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஆன்-லைனில் பதிவு செய்த பின்னர் கிடைக்கும் பிரின்ட் அவுட்டை தவறாமல் அனுப்ப வேண்டும்.

முழுமையான விபரங்களை இணையதளத்திலிருந்து அறியவும்.

ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்:



31.01.2013

இணையதள முகவரி:



www.upsc.gov.in/recruitment/advt/2013/spl51_13_eng.pdf

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us