/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
தேசிய விதை நிறுவனத்தில் காலியிடங்கள்
/
தேசிய விதை நிறுவனத்தில் காலியிடங்கள்
PUBLISHED ON : ஏப் 18, 2017

நேஷனல் சீட்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்பது இந்திய அரசின் முழுக் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு மினிரத்னா நிறுவனமாகும். இதன் தலைமையகம் புது டில்லி. இது மத்திய அரசின் விவசாயம், விவசாயிகளின் குடும்ப நலம் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் இயங்குகிறது. இதில் 188 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பிரிவுகள்: லீகல் பிரிவு உதவியாளரில் 3, மேனேஜ்மென்ட் டிரெய்னி சார்ந்த மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் பிரிவில் 2, லீகலில் 1, அசிஸ்டென்ட் கோஆப் செக்ரட்டரியில் 1, புரொடக்சனில் 30, மார்க்கெட்டிங்கில் 9, அக்ரி இன்ஜினியரிங்கில் 5, சிவில் இன்ஜினியரிங்கில் 2, எச்.ஆர்.,ரில் 7, பினான்ஸ் அண்டு அக்கவுண்ட்சில் 6, சீனியர் மேனேஜ்மென்ட் டிரெய்னி சார்ந்த மார்க்கெட்டிங்கில் 40, சிவிலில் 5, அக்ரி இன்ஜினியரிங்கில் 7, எலக்ட்ரிகலில் 2, நான்-
சூபர்வைசரி சார்ந்த டிரெய்னி பிரிவில் அக்ரியில் 26, டெக்னீசியனில் 8, எச்.ஆர்.,ரில் 11, அக்கவுண்ட்சில் 15, ஸ்டோர்சில் 6, லேபரெட்டரியில் 2ம் காலியிடங்கள் உள்ளன.
வயது: விண்ணப்ப தேதியன்று 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மூன்று விதமான பிரிவுகளில் பல்வேறு உட்பிரிவுகளில் காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவுக்கும் தனியாக கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. எனவே முழுமையான தேவைகளை இணையதளத்தை பார்த்து விண்ணப்பிக்கவும். ஒருவர் ஒரு சமயம் ஒரு பதவிக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பக் கட்டணம் 525 ரூபாய். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 2017 மே 6.
விபரங்களுக்கு: www.indiaseeds.com

