/
இணைப்பு மலர்
/
வேலை வாய்ப்பு மலர்
/
விளையாட்டு வீரர்களுக்கு வருமானவரி துறையில் வாய்ப்பு
/
விளையாட்டு வீரர்களுக்கு வருமானவரி துறையில் வாய்ப்பு
விளையாட்டு வீரர்களுக்கு வருமானவரி துறையில் வாய்ப்பு
விளையாட்டு வீரர்களுக்கு வருமானவரி துறையில் வாய்ப்பு
PUBLISHED ON : டிச 26, 2023

வருமானவரித்துறையில் விளையாட்டு வீரர்கள் ஒதுக்கீடு காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காலியிடம்: வரி உதவியாளர் 119, எம்.டி.எஸ்., 137, ஸ்டெனோகிராபர் 18, வருமானவரி இன்ஸ்பெக்டர்14, கேன்டீன் உதவியாளர் 3 என மொத்தம் 291 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: வருமானவரி இன்ஸ்பெக்டர், வரி உதவியாளர் பணிக்கு டிகிரி, மற்ற பிரிவுகளுக்கு பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.
வயது: 1.1.2023 அடிப்படையில் வருமானவரி இன்ஸ்பெக்டர் 18 -30, ஸ்டெனோ, வரி உதவியாளர் 18 -27, மற்ற பணிகளுக்கு 18 -25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
பணியிடம்: மும்பை
தேர்ச்சி முறை: சர்வதேச / தேசிய போட்டிகளில் பெற்ற சான்றிதழ் அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 200
கடைசிநாள்: 19.1.2024
விபரங்களுக்கு: mumbai-itax-sportsrecr23.com