தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வேலை வாய்ப்பு மலர்/டிகிரி முடித்தவருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் வாய்ப்பு

டிகிரி முடித்தவருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் வாய்ப்பு

டிகிரி முடித்தவருக்கு சென்னை ஐ.ஐ.டி.,யில் வாய்ப்பு


PUBLISHED ON : பிப் 13, 2024

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 13, 2024


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை ஐ.ஐ.டி., கல்லுாரியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூனியர் அசிஸ்டென்ட் 30, செக்யூரிட்டி 10, ஜூனியர் சூப்பரென்டன்ட் 9, உதவி பாதுகாப்பு அதிகாரி 4, உடற்கல்வி பயிற்றுநர் 3, குக் 2, டிரைவர் 2, விளையாட்டு அதிகாரி 1, உதவி பதிவாளர் 2 உட்பட மொத்தம் 64 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: ஜூனியர் அசிஸ்டென்ட், சூப்பரென்டன்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி பணிக்கு ஏதாவது ஒரு டிகிரி, செக்யூரிட்டி பணிக்கு பத்தாம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.

வயது: 12.3.2024 அடிப்படையில் ஜூனியர் அசிஸ்டென்ட், குக், டிரைவர், செக்யூரிட்டி பணிக்கு 27, சூப்பரென்டன்ட், உதவி பாதுகாப்பு அதிகாரி 32 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, ஸ்கில் தேர்வு, நேர்முகத்தேர்வு.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

விண்ணப்பக்கட்டணம்: ரூ. 500. பெண்கள் / எஸ்.சி.,/ எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.

கடைசிநாள்: 12.3.2024

விவரங்களுக்கு: recruit.iitm.ac.in

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us