PUBLISHED ON : ஏப் 01, 2026

செண்டு மல்லி சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், புரிசை கிராமத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரி எம். மாதவன் கூறியதாவது:
களிமண் மற்றும் மணல் கலந்த சவுடு மண்ணில், நெல் சாகுபடி செய்துள்ளேன். அந்த வரிசையில், நெல்லுக்கு மாற்று பயிராக செண்டு மல்லியை சாகுபடி செய்யலாம் என, சாகுபடி செய்துள்ளேன். 1 ஏக்கரில் செண்டு மல்லி சாகுபடி செய்துள்ளேன்.
துவக்கத்தில், செண்டு மல்லி செடிகளின் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. அதன் பின், சக்தி குரோ என, அழைக்கப்படும் நுண்ணுாட்டக் கலவை மருத்து, டி.ஏ.பி., காம்ப்ளக்ஸ் ஆகிய உரங்களை அடியுரமாக பயன்படுத்தினேன்.
அதன் பின், செடிகள் நன்றாக ஆளுயரத்திற்கு வளர்ந் துள்ளது. ஒவ்வொரு அறுவடை செய்து முடித்த பின், ஹீல்டு குரோ மருந்து வாங்கி செடிகளுக்கு போடுகிறேன். செண்டு மல்லியில் அதிகமாக விளைச்சல் கொடுக்கிறது. குறிப்பாக, அறுவடை முடிந்த பின், ஹீல்டு குரோ மருந்து வாங்கி தெளிக்கும் போது, பூக்களின் வளர்ச்சி கூடுதலாக கிடைக்கிறது.
தனியார் சென்ட் நிறுவனத்திற்கு பூக்களை விற்பனை செய்வதால், கணிசமான வருவாய் கிடைக்கிறது. நெல் பயிரை காட்டிலும், செண்டு மல்லி சாகுபடியில் கூடுதல் வருவாய் கிடைக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு - எம்.மாதவன், 90476 47281.
