தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ பலா பழத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

 பலா பழத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு

 பலா பழத்தில் அழுகல் நோயை கட்டுப்படுத்த கரைசல் தெளிப்பு


PUBLISHED ON : ஏப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பலா பழம் அழுகலை கட்டுப் படுத்துவதற்கு கரைசல் தெளிப்பது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் வேளாண் அறிவியல் நிலைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் செ.சுதாஷா கூறியதாவது:

பலா பழம் சாகுபடியை பொருத்தவரையில், பழம் துளைப்பான் மற்றும் பழம் அழுகல் நோய் தாக்கக் கூடும். இரு நோய் தாக்கம் ஏற்படும்போது, பலா பழ மகசூலில் 60 சதவீதம் வரையில் இழப்பு ஏற்படும்.

பழத்துளைப்பான், பழங்களின் மேல் தோல் பகுதியில் முட்டையிடுகின்றன. அதில் இருந்து வெளியே வரும் புழுக்கள் பழத்தின் சதைப் பகுதியை தாக்குகிறது. கரை சோபஸ் பூஞ்சை பழத்தை அழுக செய்கிறது.

குறிப்பாக, ஆண் பூக்களை அதிகமாக தாக்கும் பூச்சிகளால் ஏற்படும் காயங்களின் மூலமாக பழங்களுக்கு பூஞ்சை விரைவாக பரவுகிறது. மேலும், அடர்த்தியான மொட்டுகள் மற்றும் பலா மரத்தில் சுத்தம் இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அதிகரிக்கும்.

இதை கட்டுப்படுத்த நோய் தாக்கிய பழங்களை தேர்வு செய்து அழிக்க வேண்டும்.

அடர்த்தியான மரக் கிளைகளை வெட்டி அகற்ற வேண்டும். 1 ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை அமைத்து, பழப்பூச்சிகளை தடுக்க வேண்டும். 4 கிராம் எமாமெக்டி ன் பென்சோயேட் மருந்தை 1 லிட்டருக்கு, கரைத்து தெளிக்கலாம். காப்பர் ஆக்சி குளோரைடு, 2.5 கிராம் மருந் தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 10 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கலாம்.

இயற்கை உயிர் உரங்கள் பயன்படுத்தும்போது, வேப்ப எண்ணெயை ஒரு வாரத்திற்கு தெளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு - செ.சுதாஷா,  97910 15355.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us