தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/ களிமண் நிலத்தில் விளையும் முட்டைகோஸ்

 களிமண் நிலத்தில் விளையும் முட்டைகோஸ்

 களிமண் நிலத்தில் விளையும் முட்டைகோஸ்


PUBLISHED ON : ஏப் 01, 2026

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஏப் 01, 2026


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

முட்டைகோஸ் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:

மணல் கலந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க் கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன். அனைத்து விளை பொருட்க ளுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடை அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைபொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.

அந்த வரிசையில், கார்த்திகை மாதம் முட்டைகோஸ் சாகுபடி செய்துள்ளேன். இது, நம்மூர் மணல் கலந்த களிமண்ணுக்கு அருமையாக விளைச்சல் கொடுக்கிறது.

குளிர் பிரதேசங்களில் விளையும் காய்கறி போல பருமனாக இல்லாமல், சற்று குறைவான பருமனுடன் காணப்படுகிறது. மற்றபடி சுவை மற்றும் சத்தில் எவ்வித மாற்றமும் இல்லை.

முட்டைகோஸ் சாகுபடியை பொறுத்தவரையில், இலை உண்ணும் புழுக்கள் தாக்கம் இல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அப்போது தான் நல்ல மகசூல் பெற முடியும். எங்கள் தோட்டத்தில் விளையும் காய்கறி, பழங்கள், கீரை ஆகிய விளை பொ ருட்களுக்கு சந்தையில் அதிக வரவேற்பு இருப்பதால், கணிசமான வருவாய் ஈட்டி வருகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புக்கு - சு.ரமேஷ்,  81109 44475.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us