PUBLISHED ON : மே 23, 2017
திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தமிழ்நாடு அடிப்படைப் பணியில் காலியாக உள்ள பதவிகளுக்கு நியமனம் செய்வதற்காக தகுதி உடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்தப் பணியிடங்களுக்கு தகுதி உள்ளவர்கள் சுய சான்றளிக்கப்பட்ட உரிய சான்றிதழ் நகல்களுடன் விண்ணப்பிக்கலாம்.
பிரிவுகள்: அலுவலக உதவியாளர் பிரிவில் 23 இடங்களும், ஆண் காவலர் (வாட்ச்மேன்) பிரிவில் 4ம், மசால்ஜி பிரிவில் 12ம், தோட்டக்காரர் (கார்டனர்) பிரிவில் 3ம், பெருக்குபவர் (ஸ்வீப்பர்) பிரிவில் 5ம் சேர்த்து மொத்தம் 47 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
வயது: 17.05.2017 அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சம் 30 வயதுக்கு உட்பட்டவராகவும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் ஆகிய பிரிவினராக இருந்தால் அதிகபட்சம் 32 வயதுக்குட்பட்டவராகவும், எஸ்.சி., எஸ்.டி., ஆதரவற்ற விதவைகளாக இருந்தால் அதிகபட்சம் 35 வயதுக்குட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: அலுவலக உதவியாளர் பதவிக்கு 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதர பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாகவும், சரியாகவும் நிரப்பி, இணையதளத்தில் விண்ணப்பிப்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ள அறிவுரைகளை முழுமையாக உள்வாங்கி அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.
கடைசி நாள்: 2017 மே 25.
விபரங்களுக்கு: http://ecourts.gov.in/sites/default/files/Recruitment_17.pdf

