PUBLISHED ON : ஆக 13, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொதுத்துறையை சேர்ந்த 'பவர்கிரிட்' மின்சார நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஜூனியர் இன்ஜினியர் 15, சர்வேயர் 15, டிராப்ட்ஸ்மேன் 8 என மொத்தம் 38 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: ஜூனியர் இன்ஜினியர் பணிக்கு டிப்ளமோ, மற்ற பணிக்கு ஐ.டி.ஐ.,
வயது: ஜூனியர் இன்ஜினியர் 31, மற்ற பணி 32 (29.8.2024ன் படி)
தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, டிரேடு தேர்வு.
தேர்வு மையம்: சென்னை
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 300. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசிநாள்: 29.8.2024
விவரங்களுக்கு: powergrid.in