PUBLISHED ON : ஜன 21, 2013

இந்தியாவில் இயங்கி வரும் பொதுத்துறை வங்கிகளில் தேனா வங்கியும் ஒரு முக்கியமான வங்கி. இந்த வங்கிக்கு நாடு முழுவதும் கிளைகள் உள்ளன. வாடிக்கையாளர் சேவை, நாடு தழுவிய கிளைகள் போன்றவற்றுக்காக இந்த வங்கி அனைவராலும் அறியப்படுகிறது. இந்த வங்கியில் பல்வேறு பிரிவுகளிலான சிறப்பு அதிகாரி காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வந்துள்ளது.பிரிவுகள் மற்றும் காலி இடங்கள்:
தேனா வங்கியில் அக்ரிகல்சர் ஆபிசர் பிரிவில் 201 காலி இடங்களும், பெர்சனல் ஆபிசர் பிரிவில் 14 இடங்களும், ஐ.டி., ஆபிசர் பிரிவில் 70 காலி இடங்களும், லீகல் ஆபிசர் பிரிவில் 6 காலி இடங்களும், ராஜ்பாஷா அதிகாரி பிரிவில் 11 காலி இடங்களும், சிவில் இன்ஜினியர் பிரிவில் 3 காலி இடங்களும், எலக்ட்ரிகல் இன்ஜினியர் பிரிவில் 2 காலி இடங்களும் நிரப்பப்பட உள்ளன. தேவைகள்:
தேனா வங்கியின் மேற்கண்ட சிறப்பு அதிகாரி பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 20 வயது நிரம்பியவராகவும் 40 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் பிரிவைப் பொறுத்து கல்வித் தகுதி மாறுபடும் என்பதால் அதனை வங்கியின் இணைய தளத்தைப் பார்த்து உறுதி செய்து கொள்ளவும். மேலும் ஐ.பி.பி.எஸ்., அமைப்பு நடத்திய சிறப்பு அதிகாரிகளுக்கான பொது எழுத்துத் தேர்வை ஏற்கனவே எதிர்கொண்டு ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 24 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி., மாற்றுத் திறனாளிகள் பிரிவைச் சார்ந்தவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்த பட்சம் 21 மதிப்பெண்களைப் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இதர தகவல்கள்:
தேனா வங்கியின் சிறப்பு அதிகாரிகள் பதவிக்கு விண்ணப்பிக்க ரூ.100/-ஐக் கட்டணமாக செலுத்த வேண்டும். இந்தக் கட்டணத்தை தேனா வங்கியின் இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து பெறப்பட்ட சலான் மூலமாகவோ அல்லது நெப்ட் முறையிலோ செலுத்தலாம். இதன் பின்னர் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். முதலில் தேனா வங்கியின் பின்வரும் இணையதளத்திற்கு சென்று முழுமையான தகவல்களை அறிந்து அதன் பின்னர் விண்ணப்பிக்கவும்.ஆன்-லைனில் பதிவு செய்ய இறுதி நாள்:
04.02.2013இணையதள முகவரி:
http://www.denabank.com//uploads/files/1357621575864&Recruitment&Ad&SpecialistOff.pdf
