/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
4 கிலோ எடையுள்ள தலையணை மாம்பழ சாகுபடி
/
4 கிலோ எடையுள்ள தலையணை மாம்பழ சாகுபடி
PUBLISHED ON : டிச 18, 2024

தலையணை மாம்பழம் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த விவசாய பட்டயம் படித்த முன்னோடி விவசாயி பி.கிருஷ்ணன் கூறியதாவது:
எங்களுக்கு சொந்தமான மணல் கலந்த களி மண் நிலத்தில், 4 கிலோ மாம்பழம் என, அழைக்கப்படும் தலையணை மா சாகுபடி செய்து உள்ளேன்.
இது, மாடி தோட்டம் மற்றும் விளை நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.இந்த ரக மாம்பழம், பிற ரக மாம்பழங்களை காட்டிலும், சற்று பெரிதாக இருக்கும். இந்த பழத்தின் சுவை, அதிக இனிப்பாகவும், நார்சத்து அதிகம் நிறைந்தும் இருக்கும்.
குறிப்பாக, ஒவ்வொரு மாம்பழமும், 4 கிலோஎடை வரையில் கிடைக்கும். ஒரு காம்பிற்கு ஒரு பழம் என, தாங்கி நிற்கும். இந்த மா மரத்தில் குறைந்த மகசூல் மட்டுமே கிடைக்கும். மரங்களின் வயதிற்கு ஏற்ப கூடுதல் மகசூலுக்கு வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: பி.கிருஷ்ணன்94441 20032