/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
மீன் பிடி வலை, பைபர் படகு வாங்க 50 சதவீதம் மானியம்
/
மீன் பிடி வலை, பைபர் படகு வாங்க 50 சதவீதம் மானியம்
மீன் பிடி வலை, பைபர் படகு வாங்க 50 சதவீதம் மானியம்
மீன் பிடி வலை, பைபர் படகு வாங்க 50 சதவீதம் மானியம்
PUBLISHED ON : டிச 05, 2018

அணை, குளம், குட்டையில் மீன் பிடிப்பவர்களை உள்நாட்டு மீனவர், என அழைக்கிறோம். அவர்களது மீன் பிடிப்பு திறனை மேம்படுத்தவும், வருவாயை பெருக்கி வாழ்வாதாரத்தை உயர்த்தவும் 50 சதவீதம் மானியத்தில் மீன் பிடி வலைகள், பைபர் படகு வழங்கும் திட்டம் 2014 - 15ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.
மாவட்டம் தோறும் உள்நாட்டு மற்றும் முழு நேர மீனவர்கள் இந்த உதவியை பெற விண்ணப்பிக்கலாம். இவர்கள் உள்நாட்டு மீன் கூட்டுறவு சங்க உறுப்பினராக இருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகளில் இத்திட்டத்தில் மானியம் பெற்றிருக்கக்கூடாது.
ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு (ஒரு ரேஷன் கார்டுக்கு) ஒரு பயனாளிக்கு 20 கிலோ வலை 20 ஆயிரம் ரூபாய். மானியம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பைபர் படகு விலை 12 ஆயிரத்து 500 ரூபாய். மானியம் 6,250 ரூபாய் வழங்கப்படும். அந்தந்த மாவட்டத்தில் உள்ள மீன் துறை உதவி இயக்குனரிடம் விண்ணப்பிக்கலாம்.
விவரங்களுக்கு, 'இயக்குனர், மீன் வளத்துறை, சிவசங்கரன் சாலை, சொக்கலிங்க நகர், தேனாம்பேட்டை, சென்னை - 600 006' மற்றும் போன் எண் 044 - 243 20199ல் தொடர்பு கொள்ளலாம்.
- எம்.ஞானசேகர்
தொழில்,விவசாய ஆலோசகர், சென்னை

