sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மதுரையில் நெல் சாகுபடியில் குழப்பமான சூழ்நிலை

/

மதுரையில் நெல் சாகுபடியில் குழப்பமான சூழ்நிலை

மதுரையில் நெல் சாகுபடியில் குழப்பமான சூழ்நிலை

மதுரையில் நெல் சாகுபடியில் குழப்பமான சூழ்நிலை


PUBLISHED ON : நவ 07, 2012

Google News

PUBLISHED ON : நவ 07, 2012


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழகத்தில் நெல் உற்பத்திக்கு கை கொடுத்து உதவுவதற்கு மதுரை மாவட்டமும் ஒன்றாகும். பெரியார், வைகை பாசன திட்டங்களில் கணிசமான அளவிற்கு நெல் உற்பத்தி ஆகின்றது. பருவமழை சரியாக பெய்யாததால் இந்த வருடம் நெல் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. இவ்வாறு குழப்பமான சூழ்நிலையில் திடீரென்று மழை பெய்தது. அதனால் நவம்பரில் நெல் சாகுபடி துவங்கிவிட்டது. இம்மாதிரியான சூழ்நிலைகளில் ஒரு நெல் கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் 100நாள் நெல் ஒன்றினைக் கண்டுபிடித்துள்ளனர். அதுதான் ஜே-13 என்ற ரகமாகும். இதன் சரித்திரம் யாதெனில் மதுரை, திண்டுக்கல், காந்திகிராமம் போன்ற இடங்களில் நல்ல மகசூலினைக் கொடுத்துள்ளது. ஜே-13 நெல்லினை குச்சி நெல் என்றும் சொல்வார்கள். தமிழகத்தில் ஜே-13 அரிசியை இட்லி செய்ய மாவு காணுகின்றது. மேலும் ஜே-13 நெல் பொரியை செய்வதற்கும் உபயோகப்படுத்தப்படுகின்றது. கீழ்பவானி பாசனப்பகுதியிலும் குறிப்பாக கோபி பகுதியிலும் பாசனப் பகுதியில் நூறு நாள் நெல்லாகிய ஜே-13 சாகுபடி செய்யப் படுகின்றது. இப்போது மதுரையில் ஜே-13 ரகம் நவம்பர் மாதத் தில் நாற்றுவிட்டு நடுவதற்கு ஏற்றதாக அமைந்துள் ளது. விவசாயிகள் நெல்லினை நாற்று நடுபவர்கள் நாற்றைப் பறித்து நடவு செய்வதிலும், ஊறப்போட்ட நெல்லினை நேரிடையாக விதைப்பதும் உண்டு. களிமண் பகுதி உள்ள இடங்களிலும் சாகுபடி செய்ய வேண்டிய நிர்ப்பந்தமும் உள்ளது. களிமண் நிலங்களில் சேறு கலக்கும் பிரச்னை உள்ளது. இதனை மாட்டு ஏர் கொண்டு கலக்க முடியாது. இயந்திர சாகுபடி வல்லுனர் முனியாண்டி (94458 68011) ரோட்டவேட்டர் கருவியை உபயோகிக்க வேண்டும் என்கிறார். பிரச்னை உள்ள பகுதிகளிலெல்லாம் கருவியை உபயோகிக்காமல் போய் விடும் என்று கூறி விவசாயிகளை சீராக செய்ய வேண்டிய பணியை களிமண் பகுதியில் செய்ய வேண்டும் என்கிறார். பல விவசாயிகள் ரோட்டவேட்டர் உபயோகத்தால் பயன் அடைந்து உள்ளனர். விவசாயிகள் ஜே-13 ரகத்தை நவம்பர் மாதத்தில் சாகுபடி செய்தால் பிப்ரவரி மாதத்தில் அறுவடை செய்யலாம். ஏக்கரில் 36 மூடையும் கணிசமான வைக்கோலும் கிடைக்கும். இதனை அறுவடை செய்த நிலத்தில் கர்நாடகா பொன்னி நெல்லினை (120 நாட்கள்) சாகுபடி செய்து கணிசமான அளவு மகசூலும் லாபமும் கிடைக்கும். மேற்கண்ட கருத்துக்களை நன்கு தெரிந்தபிறகு விவசாயிகள் துணிச்சலாக கட்டுரையில் விளக்கப்பட்ட சாகுபடி பணிகளைக் கடைப்பிடித்து மிகப் பெரிய அபாயத்திலிருந்து தப்பமுடியும்.

முக்கிய சில குறிப்புகள்:



ஜே-13 நெல்லின் பலவிதமான பயன்களை எழுதுவது அவ்வளவு சுலபமானது அல்ல. உதாரணமாக ஜே-13 அவசர சாகுபடிக்கு சேற்றில் நேரிடை விதைப்பு செய்து பயன் அடைய முடியும். இதற்கு பல விஷயங்களுக்கு பிரத்யே கவனம் தரப்படுகின்றது. ஆரம்ப கட்டத்தில் சாணி உரம் பசுந்தரை இவைகளை இட்டு நிலத்தை நன்கு உழுது சேற்றினை காய்ப்பதமாக ஒரு வாரம் விட்டுவைக்க வேண்டும். களைச் செடிகள் அனைத்தும் முளைத்துவிடும். உடனே அதிக அளவு நீர் கட்டி உழுது களைச்செடிகளை அடியோடு அழிக்க வேண்டும். மணிச்சத்து உரத்தை கண்டிப்பாக போடவேண்டும். இதற்கு ஏக்கருக்கு கடைசி உழவின்போது 135 கிலோ சூப்பர் பாஸ்பேட் இடவேண்டும். ஏக்கருக்கு பொடி செய்யப் பட்ட 12 லீ கிலோ ஜிங்க் சல்பேட்டினை மணலுடன் கலந்து வயலில் தூவ வேண்டும். மூன்றாங்கொம்பு விதை விதைக்க வேண்டும். விதை விதைத்தபின் ஏழாம் நாள் கழித்து சாட்டர்ன் களைக்கொல்லி இடவேண்டும். களைக்கொல்லி இட்ட வயலில் நீர் ஒரு வாரம் வடியாமல் இருக்க வேண்டும். வயலுக்கு 40 கிலோ தழைச்சத்து (88 கிலோ யூரியா), 20 கிலோ சாம்பல் சத்து, மூரியேட் ஆப் பொட்டாஷ் இடவேண்டும். ரசாயன உரங்களை இடும் முன் வயலில் உள்ள நீரினை வடித்துவிட்டு உரமிட வேண்டும். பின்னால் பாசனம் செய்யலாம். இந்த குறிப்புகளை விவசாயிகள் கடைபிடிக்க வேண்டும்.

-எஸ்.எஸ்.நாகராஜன்






      Dinamalar
      Follow us