sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

திசுவளர்ப்பு வாழை மையத்தின் சாதனை படைத்த பெண்மணி

/

திசுவளர்ப்பு வாழை மையத்தின் சாதனை படைத்த பெண்மணி

திசுவளர்ப்பு வாழை மையத்தின் சாதனை படைத்த பெண்மணி

திசுவளர்ப்பு வாழை மையத்தின் சாதனை படைத்த பெண்மணி


PUBLISHED ON : செப் 21, 2011

Google News

PUBLISHED ON : செப் 21, 2011


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை மாவட்டம், வடவள்ளியில் வசித்துவரும் பூங்கொடி கடந்த 8 வருடங்களுக்கு முன்னால் தனியார் திசு வளர்ப்பு மையத்தில் ரூ.1500/- சம்பளத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இன்று தொழில் நுட்பக் கழக உதவியுடன் ரூ.8,00,000 வரை ஆண்டு வருமானம் ஈட்டி சுமார் 40க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறார்.

திசுவளர்ப்பு வாழை பயிரிடுவதால் ஏற்படும் நன்மைகள்

* தரமான நோயில்லா கன்றுகள் தரப்படுகின்றன.

* ஒரே சீரான அறுவடை.

* அதிக விளைச்சல்.

* வருடம் முழுவதும் கன்றுகள் கிடைக்கும்.

விவசாயிகள் திசு வளர்ப்பு வாழைக்கன்றுகளை வருடம் முழுவதும் பயிர் செய்யலாம்.

ரொபஸ்டா, கிராண்ட் 9, செவ்வாழை, குள்ள வாழை, நேந்திரன், வில்லியம்ஸ் ஆகிய முக்கிய ரகங்கள் திசுவளர்ப்பு முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கூறிய இடைவெளியில் 1 அடி, 1 அடி அளவுள்ள குழிகள் எடுத்து குழியை சம அளவில் நன்கு மக்கிய தொழு உரமும் குழியின் மேல் மண்ணும் இத்துடன் 500 கிராம் ஜிப்சம், 45 கிராம் பியூரடான், 3ஜி கலந்த கலவையைவிட்டு நிரப்பி நீர் பாய்ச்சவும். திசுவளர்ப்பு வாழைக்கன்றுகளின் பாலிதீன் பையை முழுவதுமாக நீக்கி குழியின் நடுப்பகுதியின் பையிலிருந்து மண்ணுடன் தரைமட்டத்திற்கு நடவு செய்து உடன் நீர் பாய்ச்சவும் நல்லது.

உரங்களும் உரமிடுதலும்: நட்ட 45வது நாளில் நன்கு மக்கிய தொழு உரம் 5 கிலோ ஒரு மரத்திற்கு என்ற வகையில் இடவேண்டும். மண் பரிசோதனை செய்து நிலத்தின் தன்மைக்கேற்ப சிபாரிசுப்படி உரமிடுவது நல்ல பலனை அளிக்கும். திசு வாழைக்கன்றுகளை மாலை நேரங்களில் ஈர மண்ணில் நடுவது நல்லது. எமிசான் 1 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் (அ) பகலால் 1 கிராம் 1 லிட்டர் தண்ணீரில் (அ) பிளீசிங் பவுடர் 10 கிராம், 1 லிட்டர் நட்ட ஒரு வாரத்திற்குள் வேர்கள் நன்கு நனையுமாறு ஊற்றவும். இதையே நட்ட 3 மற்றும் 5ம் மாதங்களிலும் பின்பற்றவும்.

3வது மாதத்திலிருந்து தாய் மரத்திற்கு காயம் ஏற்படாதவண்ணம் மாதாமாதம் பக்கக் கன்றுகளை நீக்கிவரவும். காய்ந்த இலைகள், சருகுகளை அவ்வப்போது அகற்றி அப்புறப்படுத்தவும். தேவைக்கேற்ப மூங்கில், சவுக்குக் கம்புகளைக் கொண்டு மரத்திற்கு முட்டுக்கொடுக்கவும். 3வது, 4வது மற்றும் 7வது மாதங்களில் மண் அணைக்கவும். களைக்கட்டுப்பாடு அவசியம். தொடர்புக்கு: பூங்கொடி, கோவை. மொபைல்:

98422 33485, 92446 38689, போன்: 0422-653 8546.

நடவுமுறை:

ரகங்கள் பயிர் இடைவெளி ஒரு ஏக்கருக்கு தேவைப்படும்
கன்றுகளின் எண்ணிக்கை

குள்ளவாழை 51/2 அடி து 5 1/2 அடி 1470

கிரான்ட் 9, ரொபஸ்டா,

நேந்திரன், வில்லியம்ஸ் 6 அடி து 6 அடி 1234

செவ்வாழை 7 அடி து 7 அடி 907

-கே.சத்தியபிரபா, உடுமலை






      Dinamalar
      Follow us