/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
உலர்ந்து சருகாகும் வரை மகசூல் தரும் உளுந்து ரகம்
/
உலர்ந்து சருகாகும் வரை மகசூல் தரும் உளுந்து ரகம்
PUBLISHED ON : ஆக 21, 2024

'வம்பன்- - 8' ரக உளுந்து, சவுடு மண்ணில் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காந்துார் கிராமத்தைச் சேர்ந்த இளங்கலை பொறியியல் பட்டதாரி விவசாயி எம்.வாசுதேவன் கூறியதாவது:
எனக்கு சொந்தமான சவுடு மண் நிலத்தில், இயற்கை உரங்களை பயன்படுத்தி, வம்பன் - -8 ரக உளுந்து சாகுபடி செய்துள்ளேன். அதே பைப்லைனில், மீன் அமிலம், பஞ்சகாவ்யா ஆகிய இயற்கை உரங்களை கலந்து பாய்ச்சி வருகிறேன். இந்த ரக உளுந்து செடிகள், அடர்த்தியாக வளர்கின்றன.
ஒவ்வொரு செடியிலும், 45 நாள் கழித்து காய்கள் பிடிக்கத் துவங்குகின்றன. இந்த ரகம், பிற ரக செடிகளை போல இல்லாமல், சற்று வித்தியாசமாக உள்ளது.
பிற ரக உளுந்து செடிகளில், ஒரே நேரத்தில் கொத்துக் கொத்தாக காய்கள்பிடிக்கும். முதிர்வு அடைந்த பின் அறுவடை செய்துவிடலாம்.
வம்பன் - -8 ரக உளுந்து செடிகளில், பூ எடுத்து காய்க்க துவங்கினால், மற்றொரு இலையில் இருந்து, மற்றொரு பூ பூத்து காய்க்க துவங்கும்.
இதேபோல, செடி உலர்ந்து சருகாகும் வரையில், உளுந்துபறித்துக் கொண்டே இருக்கலாம். மகசூலும்கூடுதலாக ஈட்ட முடியும்.
குறிப்பாக, 1 ஏக்கருக்கு, பிற ரக உளுந்து ரகம், 350 கிலோ வரையில் மகசூல் எடுக்க முடியும். வம்பன் - -8 ரகத்தில், 600 கிலோ உளுந்து வரையில் மகசூல் எடுக்கலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு: எம்.வாசுதேவன்,
95974 60346