sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

வனத்துறை உதவியுடன் தோப்புக்காடுகள்

/

வனத்துறை உதவியுடன் தோப்புக்காடுகள்

வனத்துறை உதவியுடன் தோப்புக்காடுகள்

வனத்துறை உதவியுடன் தோப்புக்காடுகள்


PUBLISHED ON : ஜூன் 08, 2016

Google News

PUBLISHED ON : ஜூன் 08, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இந்தியாவின் தேசிய வனக்கொள்கைப்படி வனம் அல்லது பசுமைப் போர்வை பரப்பு மொத்த நிலப்பரப்பில் 33 சதவிகிதம் இருத்தல் வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் 22 சதவிகிதம் மட்டுமே உள்ளது. இன்னும் 11 சதவிகிதம் தமிழ்நாட்டு நிலப்பரப்பில் மரங்களை நட வேண்டும். எனவே வனவியல் விரிவாக்கக் கோட்டம் என்ற பெயரில் பட்டா நிலங்களிலும், தரிசு, புறம்போக்கு, சாலை ஓரம், பள்ளி, கல்லூரி, தனியார் மற்றும் அரசு அலுவலக வளாகங்களில் மரங்கள் நட்டு வளர்க்க, மாவட்ட தலை நகரங்களிலும் ஒரு கன்று உற்பத்தி, விதை விற்பனை மற்றும் ஆலோசனை மையங்களை நிறுவவும், மரக்கன்றுகள் உற்பத்தி செய்யவும் உதவுகின்றனர்.

மரக்கன்று வளர்க்கும் தொழில் நுட்பத்தை பலருக்கு கற்றுத் தருகின்றனர். மரங்கள் நடுவது எளிது. அதை வளர்க்க தொடர்ந்து தண்ணீர் ஊற்ற வேண்டும். விதை சேகரம், நேர்த்தி, நாற்றங்கால் பராமரிப்பு, மண்ணின் குணங்கள், ஆய்வு, உயிர் உரங்கள், நோய், பூச்சி மேலாண்மை, தடி மரங்களின் கிளைகளை லாவகமாக வெட்டுதல் என பல தொழில் நுட்பங்களை மரம் வளர்ப்போர் அறிந்து கொண்டால் இந்திய வனக்கொள்கை 1988 சட்டம் உறுதியாக நடைமுறைக்கு வந்து விடும்.

மரம் வளர்க்க வேண்டும் என கருதும் மக்கள், சிறு, குறு விவசாயிகள், கன்று விதை ஆலோசனை பெற மாவட்ட வன விரிவாக்க அலுவலகங்களை அணுகலாம் அல்லது 'தலைமை அலுவலகம், வன விரிவாக்கக் கோட்டம், வனத்துறை, பனகல் மாளிகை, சைதாப்பேட்டை,

சென்னை - 15' அல்லது தொலைபேசி 044 2434 8059 ல் தொடர்பு கொள்ளலாம்.

- எம்.ஞானசேகர், விவசாய ஆலோசகர், சென்னை.

93807 55629






      Dinamalar
      Follow us