
தமிழகத்தில் வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை வளர்ப்பு, மீன் வளம், வேளாண் பொறியியல், மனையியல், வனவியல், விதை மற்றும் தீவன மேலாண்மை போன்ற துறைகளின் புதிய நவீன தொழில் நுட்பங்கள் அனைத்து விவசாயிகளையும் சென்றடையும்.
வேலையில்லா விவசாய, கால்நடை, மீன் வள பட்டதாரிகள், வேளாண் பொறியியல் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தும் நல்ல நோக்கத்துடன் மத்திய அரசின் வேளாண் அமைச்சக நிதி உதவியுடன் 'மேனேஜ்' எனும் நிறுவனமும், நபார்டு வங்கியும் இருமாத இலவச பயிற்சியை நடத்துகின்றன.
மதுரையில் இப்பயிற்சியை அரசு அங்கீகாரம் பெற்ற 'வாப்ஸ்' நிறுவனம் நடத்த அனுமதி பெற்றுள்ளது. பயிற்சியின் போது தங்குமிடம், உணவு, இலவசம். நிர்வாகத் திறமை, தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.
வேளாண்மை, கால்நடை மற்றும் மனையியல் ஆராய்ச்சி நிலையங்கள், விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், விவசாய ஒப்பந்த சாகுபடி மையங்களுக்கு நேரில் அழைத்து சென்று காட்டப்படும்.
இப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு வங்கி கடன் பெற இலவச திட்ட அறிக்கைகளும் தயாரி்தது தரப்படும். பயிற்சி முடிந்ததும், அக்ரி கிளினிக், அக்ரி பிசினஸ் மையங்கள் மற்றும் அக்ரி ஸ்டார்ட் அப் அமைக்க கடன் பெறலாம். அதற்கான ஆலோசனை வழங்கப்படுகிறது.
20 லட்சம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் கடன் பெற வாய்ப்பு உள்ளது.
இதில் நபார்டு வங்கியின் கடனில் பொதுப்பிரிவு சேர்ந்தவர்களுக்கு 20 சதவீதம், பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கு 44 சதவீதம் இலவச மானியம் உண்டு. மாணவர்கள், விவசாய பட்டம், டிப்ளமோ படித்தவர்கள் பயனடையலாம். தொடர்புக்கு 0452 253 8642.
- எம்.ஞானசேகர்
விவசாய ஆலோசகர், சென்னை.

