/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
களிமண் நிலத்தில் சாகுபடியாகும் ஆந்திரா சன்ன ரக நெல்
/
களிமண் நிலத்தில் சாகுபடியாகும் ஆந்திரா சன்ன ரக நெல்
களிமண் நிலத்தில் சாகுபடியாகும் ஆந்திரா சன்ன ரக நெல்
களிமண் நிலத்தில் சாகுபடியாகும் ஆந்திரா சன்ன ரக நெல்
PUBLISHED ON : ஜூலை 10, 2024

'எம்.டி.யூ.,-1224' ஆந்திரா சன்ன ரக நெல் சாகுபடி குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், பரந்துார் கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி ஆர். தேவராஜ் கூறியதாவது:
பலவித ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், 'எம்.டி.யூ.,- 1224' ஆந்திரா சன்ன ரக நெல் முதல் முறையாக சாகுபடி செய்துள்ளேன்.
இது, 135 நாளில் மகசூலுக்கு வரும். இரண்டரை அடி உயரம் வளரும். மழைக்காலத்திலும், நெற்கதிர்கள் நிலத்தில் சாயாது. ஒரு ஏக்கருக்கு, 35 நெல் மூட்டைகள் மகசூலுக்கு கிடைக்கும் என, ஆந்திரா ரக முன்னோடி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இது, பாபட்லா ரக நெல் மற்றும் என்.எல்.ஆர்., ரகங்களில் இருந்து உருவாக்கப்பட்ட சன்ன ரகமாகும். களிமண் நிலத்தில், சாகுபடி செய்துள்ளேன். அறுவடைக்குப்பின் தான் மகசூல் நிலவரம் தெரிய வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: ஆர்.தேவராஜ்,
87547 97918.