/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நாட்டுக்கோழிகள் நடமாடும் 'ஏ.டி.எம்.,'கள்
/
நாட்டுக்கோழிகள் நடமாடும் 'ஏ.டி.எம்.,'கள்
PUBLISHED ON : மே 29, 2019

நாட்டுக்கோழிகள் கிராமப்புற மகளிருக்கு நடமாடும் ஏ.டி.எம்.,களாக செயல்படுகின்றன. கிராமப் பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றுகின்றன. ஏறத்தாழ நாட்டுக்கோழி இனங்கள் இருபதுக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் உள்ளன. குருவுக்கோழி, சண்டைக்கோழி, பெருவிடைக்கோழி, கருங்கால் கோழி, கிராப்புக்கோழி, கொண்டைக்கோழி, குட்டைக்கால் கோழி என்பவை அவற்றில் சில இனங்கள்.
நாட்டுக்கோழி இனங்கள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி திறன் கொண்டவை. பண்ணைக்கோழி பராமரிப்பு போல் அதிக தொழில்நுட்ப உத்திகள் கிடையாது.
நாட்டுக் கோழிகள் உருவத்தில் சிறிதாகவும், எடை குறைவாகவும் இருப்பதால் எதிரிகளிடம் இருந்து தங்களை பாதுகாத்து கொள்வதில் திறமை படைத்தவை. மிகக்குறைந்த மூலதனத்தில் வளர்க்கலாம். ஆண்டுக்கு 80 முதல் 120 முட்டைகள் வரை இடும்.
நாட்டுக்கோழிகள் ஒன்றையொன்று கொத்திக்கொள்ளாமல் இருப்பதற்கும், தீவன விரயத்தை தடுக்கவும் அலகு வெட்ட வேண்டும். இருப்பினும் அலகு வெட்டப்பட்ட கோழிகள் சந்தையில் அதிக விலைக்கு போவதில்லை. அவற்றை விலைக்கு வாங்கும் வியாபாரிகள் அலகு வெட்டப்பட்ட கோழிகளை நாட்டுக்கோழிகள் என நம்புவதில்லை.
எனவே, விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கின்றனர். இதனை தவிர்க்க அனைத்து கோழிகளுக்கும் விவசாயிகள் அலகு வெட்ட வேண்டும் என்று கட்டாயமில்லை. அலகு வெட்டியே ஆக வேண்டும் என்ற அவசியம் இருந்தால் மட்டுமே ஒரு சில கோழிகளுக்கு வெட்டலாம். தொடர்புக்கு 94864 69044.
- டாக்டர் வி.ராஜேந்திரன்
முன்னாள் இணை இயக்குனர்
கால்நடை பராமரிப்புத்துறை.

