PUBLISHED ON : மார் 11, 2026

அ நிறம் | அளவு
செங்கல்பட்டு அடுத்த, காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் நிலையம் இயங்கி வருகிறது. இங்கு, விஞ்ஞான முறையில் தேனீ வளர்ப்பு குறித்து, வரும் -23ம் தேதி முதல் 29ம் தேதி வரையில், ஏழு நாட்கள் இலவச பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
தேனீ வளர்ப்பின் முக்கியத்துவம், தேனில் மதிப்புக்கூட்டிய பொருட்கள் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு விதமான பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.
இந்த பயிற்சி முகாமில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த படித்த இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்கலாம். குறிப்பாக, 3 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்திருக்க வேண்டும். வேர்க்கடலை, எள், பழத்தோட்டம் ஆகிய பயிர்கள் பயிரிடும் விவசாயிகளாக இருக்க வேண்டும்.
தொடர்புக்கு - பெ.முருகன், 99405 42371.
