sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

மாதுளையின் பயன்

/

மாதுளையின் பயன்

மாதுளையின் பயன்

மாதுளையின் பயன்


PUBLISHED ON : ஏப் 30, 2014

Google News

PUBLISHED ON : ஏப் 30, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தத்தம் வீடுகளில் உள்ள காலியான இடங்களிலும், மற்றும் வளமான தோட்டங்களிலும் பயிரிட்டு வளர்க்க மிகவும் ஏற்றதொரு மர வகையைச் சார்ந்ததாகும் மாதுளை மரம். இது பழத்திற்காகவே பயிரிடப்படும் சிறிய மரம் - சிறிய பசுமை இலைகள்- சிகப்பு பூக்கள்- இனிய பழச்சாறு கொண்ட விதைகள். இயற்கை ஈர்ந்துள்ள வரப்பிரசாதம்.

எல்லா காலப்பகுதிகளிலும் வளமாக வளரும் தன்மையையும், மிக்கவாறும் வறட்சியை நாடுகின்ற தன்மையையும் இது கொண்டுள்ளது. தொடக்கத்தில் இது செடியாக உள்ள பருவத்தில் நல்ல தண்ணீரை அவ்வப்போது இட்டு வளர்த்து வந்தால், பின்பு நல்லபடியாக விளைச்சலை அள்ளித்தரும். வறட்சி, வெப்பம் இவை மாதுளைக்கு மிகவும் இன்றியமையாதவை ஆகும். வளம் செறிந்த மண்ணில் இது நல்ல பலனைத் தரும்.

வேர்ப்பதியன் முறையில் வளர்க்கப்படும் செடிகளை வெளித்தோட்டங்களிலும், ஏற்கனவே வளர்ச்சி பெற்றுள்ள கன்றுகளை வீட்டுத் தோட்டங்களிலும் பயிரிட்டு வளர்க்கலாம். ஓரோர் பதியன் கன்றுக்கும் நான்கு மீட்டர் இடைவெளி இருத்தல் அவசியம். மூன்று அடி ஆழமான குழிகளில் நடவுதல் செய்ய வேண்டும். தவறாமல் அன்றாடம் நல்ல தண்ணீரைப் பாய்ச்ச வேண்டும். மாட்டு எரு, இயற்கை உரம், அமோனியம் சல்பேட் ஆகியவற்றை ஆண்டுக்கு நான்கு முறை இட வேண்டும். பூக்கத் தொடங்கியதும், ஆறேழு மாதங்களில் முதிர்ச்சி அடைந்த காய்களைக் காணலாம். நன்றாக வளர்ச்சி பெற்று பலன் தருவதற்கு ஏறத்தாழ நான்கு வருஷங்கள் ஆகும். மஞ்சள் நிறமும் பழுப்பு வண்ணமும் கலந்த தோற்றம் உண்டாகும் போது காய்களைப் பறிக்கலாம்.

நன்றாகக் காய்க்கத் தொடங்கினால், தொடக்கத்தில் நூறு காய்களும், முதிர்வு கட்டத்தில் நூற்றைம்பது காய்களும் உத்தேச முறையில் மாதுளை மரத்திலிருந்து பெற இயலும். அக்டோபர் தொட்டு டிசம்பர் வரை அதிகமான ஆயுள் ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் எனப்படுகிறது. மாதுளம் பூ, பிஞ்சு, வித்து, கனிச்சாறு, பட்டை, வேர் இவை அனைத்தும் மருத்துவத்துறையில் பெரி தும் பயன்படுத்தப்படுகின்றன.

மாதுளம் பழ ஜூஸ் எல்லோராலும் விரும்பப்படும் ஓர் இனிய பானமாகும். மாதுளை சர்பத், மணப்பாகு, சலாட் முதலான படைப்புகள் இதன் சார்பில் உள்ளன. இதயத்திற்கு நன்மை தரும் ஆண்ட்டி ஆக்ஸிடெண்ட் மாதுளம் பழத்தில் அதிகம் உள்ளதாம்.

இதனால் அசுத்தமான கொலஸ்ட்ரால் குறைந்து இதயநோய் மட்டுப்படுமாம். 'மாதுளைச்சாறு மன நோய்க்கு மருந்து' ஓர் அறிவுரை.

- எஸ்.நாகரத்தினம்,

விருதுநகர்-626 001.






      Dinamalar
      Follow us