/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிகம் வருவாய் ஈட்ட பெங்களூரு பந்தல் காய்கறி
/
அதிகம் வருவாய் ஈட்ட பெங்களூரு பந்தல் காய்கறி
PUBLISHED ON : ஏப் 23, 2025

பெங்களூரு பந்தல் முறையில், கொடி காய்கறிகள் சாகுபடி செய்வது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், காவாந்தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி சு.ரமேஷ் கூறியதாவது:
மணல் கடந்த களிமண் நிலத்தில், கீரை, வேர்க்கடலை, காய்கறி, பழங்கள் ஆகியவை சாகுபடி செய்துள்ளேன்.
அனைத்து விளைபொருட்களுக்கும், ரசாயன உரங்கள் பயன்பாடு அறவே தவிர்த்துள்ளேன். இயற்கை உரங்களை பயன்படுத்தி விளைபொருட்களை சாகுபடி செய்து வருகிறேன்.
அந்த வரிசையில், பீர்க்கன்காய், சுரைக்காய், புடலங்காய் உள்ளிட்ட பந்தல் காய்கறிகளை பெங்களூரு பந்தல் முறையில் சாகுபடி செய்துள்ளேன். இது, பிற ரக காய்கறி பந்தலை போல இடத்தை அடைத்துக் கொண்டிருக்காது. வரப்பு போல ஒரே நீளமாகவும், ஐந்து அடி உயரத்தில் செங்குத்தாகவும் இருக்கும்.
இதில், பந்தல் காய்கறிகளை ஏற்றி சாகுபடி செய்யும் போது, சேதமின்றி வருவாய் கிடைக்கிறது. நோய், பூச்சி தாக்குதலும் குறைவாக காணப்படுகிறது.
குறிப்பாக, மழை காலத்தில் இந்த பெங்களூரு பந்தல் முறையில் சாகுபடி செய்யும் போது, நல்ல மகசூல் மற்றும் சேதம் இல்லாமல் வருவாய் ஈட்டலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: சு.ரமேஷ், 81109 44475.