/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
அதிக மகசூலுக்கு உயிர் கொல்லி மருந்து
/
அதிக மகசூலுக்கு உயிர் கொல்லி மருந்து
PUBLISHED ON : மே 21, 2025

உயிர் கொல்லி மருந்து பயன்பாடு குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவிப் பேராசிரியர்முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உற்பத்தி செய்யப்படும் வேதியியல்மருந்துகளுக்கு மாற்று மருந்தாக, 'பேசில்லஸ் சப்டிலிஸ்' உயிர் கொல்லி மருந்து பயன்படுத்தலாம்.
சுற்றுச்சூழல் நிலைகளை தாங்கி வளரக்கூடிய பயிர்களை தாக்கும் நோய்களுக்கு உயிர் கொல்லி மருந்தாகும்.
குறிப்பாக, நெல்லில் பாக்டீரியா இலை கருகல் நோய், இலை உறை கருகல் நோய், செம்புள்ளி நோய், இலை உறை அழுகல் நோய், நெல் நிற மாற்றம் ஆகிய பல்வேறு வித நோய்களை கட்டுப்படுத்துவதில், இந்த உயிர் கொல்லி மருந்து சிறப்பாக வேலை செய்கிறது.
இந்த உயிர் கொல்லி மருந்து, தாவர வளர்ச்சி, ஹார்மோன்களைஉற்பத்தி செய்வதால்பயிரின் வளர்ச்சி அதிகரிக்கிறது.
மேலும், நோய்க் கிருமி களுக்கு எதிரான புரதங்களை இவை குவித்து வைப்பதால் பயிர்களின் எதிர்ப்பு திறனையும்அதிகரிக்கிறது.
மண்ணில் இருக்கும் பாஸ்பரஸ் சத்தினை தாவரங்களுக்கு அதிகமாக பெற்று தருவதுடன், நைட்ரஜன் நிலைப் படுத்துதலை மேம்படுத்தஉதவுகிறது. மேலும், வேதி உரங்களின்பயன்பாடு குறைகிறது. களர், உவர் மண் மாற்றும் தன்மை கொண்டது.
இதை பயன்படுத்தி நெல் நாற்று கட்டுகளை ஊறவைத்து நடவுசெய்யலாம்.
தொழு உரத்துடன் மணல் கலந்து துாவலாம். இந்த மருந்துகளை பெற, www.tnauagricrt.comஎன்கிற இணையதளத்தில் பதிவு செய்து வாங்கி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.
தொடர்புக்கு:முனைவர் செ.சுதாஷா,
திரூர்.
97910 15355.