/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
பிற நாட்டு பழ மரங்களில் விண் பதியம் போடலாம்
/
பிற நாட்டு பழ மரங்களில் விண் பதியம் போடலாம்
PUBLISHED ON : அக் 23, 2024

பிற நாட்டு ரக செடிகளில், விண் பதியம் போடுவது குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அடுத்த கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:
மலை மண் சார்ந்த செம்மண் நிலத்தில், டிராகன், முள் சீதா, சப்போட்டா ஆகிய பழங்களை சாகுபடி செய்துள்ளேன். இதுதவிர, தாய்லாந்து பலா, பிளாக் பெர்ரி, நீல பெர்ரி உள்ளிட்ட பிற நாடுகளில் விளையும் பழ மரங்களை நம்மூர் மலை மண்ணில் சாகுபடி செய்துள்ளேன்.
மகசூல் கொடுக்கும் மரங்களில் இருந்து, விண் பதியம் வாயிலாக, நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். அனைத்து விதமான செடிகளிலும், விண் பதியம் போடலாம். இந்த பதியத்தின் வாயிலாக, புது விதமான செடிகளை உற்பத்தி செய்யலாம்.
குறிப்பாக, எந்த மண்ணில் பழ மரங்களை சாகுபடி செய்தாலும், அந்த மண்ணில் விளைந்த மரத்தில் விண் பதியம் போடும் போது, நன்றாக நாற்றுகள் உற்பத்தி செய்ய முடியும்.
இதன் வாயிலாக, அதிகமான விளைச்சலை கொண்டு வருவதோடு, கணிசமான வருவாய் ஈட்ட வழி வகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: கே.வெங்கடபதி,
93829 61000.