sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கோடைகாலத்தில் கோழிகளை விரட்டி பிடிக்கக் கூடாது

/

கோடைகாலத்தில் கோழிகளை விரட்டி பிடிக்கக் கூடாது

கோடைகாலத்தில் கோழிகளை விரட்டி பிடிக்கக் கூடாது

கோடைகாலத்தில் கோழிகளை விரட்டி பிடிக்கக் கூடாது


PUBLISHED ON : ஏப் 17, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 17, 2013


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோடை காலத்தில் கோழிகளை விரட்டிப் பிடித்தால், அவை பலவீனம் அடைகின்றன. கோடை என்றாலே கோழிகளுக்கு சோதனையான காலம்தான். சில பராமரிப்பு முறைகள் மூலம் நிவர்த்திக்கலாம். இறைச்சி கோழி வளர்ப்பைப் பொறுத்தவரை, கோடை காலத்தில் வெப்ப அதிர்ச்சி நோய் தாக்கும். சுற்றுப்புற கூடுதல் வெப்பநிலை தான், இதற்கு காரணம். இவற்றுக்கு இயற்கையில் வியர்வை சுரப்பிகள் கிடையாது. இதனால் கூடுதல் வெப்பத்தை, உடலில் இருந்து வியர்வை மூலம் வெளியேற்ற இயலாது.

இறைச்சி கோழிகளில் உடல் கொழுப்பு அதிகமிருப்பதால், கோழிக் கூட்டில் காற்றோட்டமான வசதி இல்லாதது, சுற்றுப்புற வெப்பத்தால் வெப்ப அதிர்ச்சி ஏற்படும். நோய் தாக்கிய கோழிகளுக்கு மூச்சிரைப்பு, சோர்வு ஏற்படும். இவை நிறைய தண்ணீர் குடிக்கும். தீனி அதிகம் சாப்பிடாது. பண்ணையின் பக்கவாட்டுச் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும். பிற்பகலில் இறந்து விடும்.

பண்ணையில் தண்ணீர் வைக்கும் பாத்திரங்கள் அதிகமாக வைக்க வேண்டும். தண்ணீரில் ஐஸ்கட்டிகள் சேர்க்கலாம். கூரையின் மேல் வைக்கோலை பரப்பி, தண்ணீர் தெளித்து வைத்து வெப்பத்தைக் குறைக்கலாம். பக்கவாட்டில் ஈரச்சாக்குகளை தொங்கவிடலாம்.

உலர் தீவனமாக கொடுக்காமல், தண்ணீர் சேர்த்து கொடுக்க வேண்டும். விடியும் முன், மின்விளக்குகளை எரியவிட்டால், அந்நேரத்தில் தீவனம் சாப்பிட ஏதுவாக இருக்கும். நேரமாகும் போது வெப்பம் அதிகமானால், தீவனம் எடுப்பது குறையும். நூறு கோழிகளுக்கு 500 மில்லி கிராம் வீதம், 'விட்டமின் சி' சத்து கொடுக்கலாம். குளிர்ந்த மோர் குடிக்க தரலாம். பத்து லிட்டர் தண்ணீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பிழிந்து தரலாம்.

பண்ணைக்குள் கோழியின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதிக எண்ணிக்கை இருந்தால் வெளி வெப்பநிலை கூடுதலாகும். ஒவ்வொரு கோழிக்கும் ஒன்றரை சதுர அடி இடம் தரவேண்டும். நோய் தாக்கினால், மருந்துகளின் மூலம் கட்டுப் படுத்தலாம்.

கறவை மாடுகளை வெப்பநோய் தாக்காமல் இருக்க, பசுந்தீவனங்களை தரவேண்டும். அடிக்கடி குளிக்க வைக்க வேண்டும். கம்பு, சோளம் போன்ற குளிர்ச்சியான தீவனங்களை அரைத்து தண்ணீரில் கலந்து தரலாம். பசுந்தீவனங்கள் இருந்தாலும் பால் உற்பத்தி அதிகரிக்கும். பசுந்தீவனங்களை உற்பத்தி செய்ய, தமிழக அரசு ஏக்கருக்கு ரூ.12ஆயிரம் வரை மானியம் தருகிறது.

-டாக்டர் வி. ராஜேந்திரன், கால்நடை பராமரிப்புத் துறை, கொடைக்கானல்.






      Dinamalar
      Follow us