தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/விவசாய மலர்/மருத்துவ குணம் வாய்ந்த கடக்நாத் கோழி

மருத்துவ குணம் வாய்ந்த கடக்நாத் கோழி

மருத்துவ குணம் வாய்ந்த கடக்நாத் கோழி


PUBLISHED ON : அக் 25, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கன்னிமார் கோயில் புதுாரை சேர்ந்தவர் சசிராம். இவர் கருங்கால் கோழி (கடக்நாத் கோழி) வளர்த்து விவசாயிகளுக்கு கருங்கால் கோழிக் குஞ்சுகளை கொடுத்து வருகிறார்.



கடக்நாத் (எ) கருங்கால்


இந்த இனம் கலமாசி என்று அழைக்கப்படுகிறது. கருப்பு சதையுடைய கோழி என்பது இதன் பொருள். இவ்வினம் மத்திய பிரதேசத்தின் பிறப்பிடம். இதன் உடல் உள் உறுப்புகள் கருமை நிறமாக இருக்கும். உடலின் தசைகள், நரம்புகள், மூளை முதலியன கருப்பு நிறத்தில் காணப்படும். இதற்கு காரணம் மெலனின் எனப்படும் நிறமியாகும். பழங்குடியினர், ஆதிவாசிகள் இக்கோழிகளை விரும்பி வளர்த்து வருகின்றனர். சேவல் வேண்டுதலுக்காகப் பயன்படுகிறது. அதிக வெப்பத்தையும், குளிரையும் தாங்கி வளரும் தன்மை கொண்டது.

நீல நிறத்தில் குஞ்சுகள்

கோழிக்குஞ்சுகள் நீலம் மற்றும் கருப்பு நிறத்துடன், பின் பகுதியில் கருப்புக் கோடுகளுடன் காணப்படும். பருவம் அடைந்த கோழிகளின் இறகுகள் கருநீல நிறத்தில் காணப்படும். தோல், கால்கள், நகங்கள் கருப்பாக இருக்கும். இறைச்சி கருப்பாக இருந்தாலும் சுவை அலாதியானது. பழங்குடியினர் இக்கோழிகளின் ரத்தம், இறைச்சியை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தி வருகின்றனர். குழந்தைகள் முதல் முதியோர் வரை விரும்பி உண்ணும் சத்தான, மருத்துவ குணம் கொண்ட இறைச்சி ரகம் இதற்கு உண்டு.



உற்பத்தியின் பண்புகள்


சேவல் உடல் எடை 1.4 முதல் 2 கிலோ. பெட்டைக்கோழி உடல் எடை 1 - 1.5 கிலோ. இதன் பருவம் ஆறு மாதங்கள். ஓராண்டில் 105 முட்டைகள் இடும். முட்டையின் எடை 40வது வாரத்தில் 49 கிராம் என்ற அளவில் இருக்கும். கருவுறும் திறன் 55 சதவிகிதம். குஞ்சு பொரிக்கும் திறன் 52 சதவிகிதம்.

நாட்டுக் கோழிகளின் உற்பத்தித் திறனை மேம்படுத்த மண்டலக் கோழியினை பண்ணைகள், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் நிலையங்கள், வேளாண் மற்றும் கால்நடைப் பல்கலை ஆகியவை பல்வேறு வகையான கோழியினங்களை உற்பத்தி செய்துள்ளன.

இருவகை பயன்பாடுள்ள (முட்டை மற்றும் இறைச்சி வகை) வெளிநாட்டு கோழிகளின் மரபணுப் பண்புகளை, உள்நாட்டு கோழியினத்தின் மரபணுப் பண்புகளுடன் சேர்த்து தரம் உயர்த்தப்பட்ட கோழியினங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

அடைகாக்காத கோழிகள்

உள்நாட்டு கோழியினங்களின் தேவை அதிகரித்து வருவதோடு தரம் உயர்த்தப்பட்ட பல வண்ண இறைச்சி கோழிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது. இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் இக்கோழிகளின் எண்ணிக்கை மொத்த கோழிகளின் எண்ணிக்கையில் 5 முதல் 7 சதவிகிதம். பல வண்ணங்களில் காணப்படும் தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகள் காண்பவரின் கண்களுக்கு விருந்தாக அமைகின்றன. குறைந்த செலவிலான கொட்டகை அமைப்பு, சத்துக்கள் குறைந்த தீவனம் மற்றும் பராமரிப்பு முறைகளிலும் நன்கு வளரக்கூடியவை. அடைகாக்கும் குணம் காணப்படுவதில்லை. எனவே அதிக முட்டைகளிடும்.

ரசிக்க ருசிக்க வாங்க

தரம் உயர்த்தப்பட்ட நாட்டுக் கோழிகளின் முட்டை மற்றும் இறைச்சியில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நாட்டுக்கோழியை போன்றே இருக்கும். குறைந்த கொழுப்பு சத்து கொண்ட இக்கோழியிறைச்சி, முதியோர்களுக்கும் ஏற்றது. அதிக நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளும் இயல்பு கொண்டவை. தரம் குறைந்த புரதம் மற்றும் எரிசக்தி கொண்ட தானியங்களை உட்கொண்டு முட்டையிடும் திறன் கொண்டவை. அதிக நோய் எதிர்ப்பு திறன் மற்றும் நீண்ட காலம் உயிர் வாழும் தன்மை கொண்டவை. நாட்டுக் கோழிகளின் முட்டையை விட அதிக எடையையும், அதிக கருவறும் மற்றும் குஞ்சு பொரிக்கும் திறன் கொண்டவை.

- டி.யுவராஜ்

வேளாண் பொறியாளர், உடுமலை.

94865 85997

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us