sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 29, 2025 ,கார்த்திகை 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

விவசாய மலர்

/

கஷ்டத்தில் கை கொடுக்கும் தென்னை

/

கஷ்டத்தில் கை கொடுக்கும் தென்னை

கஷ்டத்தில் கை கொடுக்கும் தென்னை

கஷ்டத்தில் கை கொடுக்கும் தென்னை


PUBLISHED ON : நவ 19, 2014

Google News

PUBLISHED ON : நவ 19, 2014


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

''தானுண்ட நீரை தலைமேல் தருவது தென்னை'' பெத்த பிள்ளை சோறு போடா விட்டாலும் நட்டபிள்ளை சோறு போடும்'', - போன்ற நம்பிக்கை கேரள மக்களிடம் அதிகம் உள்ளது. புஞ்சை பயிர்களான எள், கொள், கடலை, காய்கறிகள், பருத்தி, பயறு, அவரை, துவரை, மொச்சை, மிளகாய், மல்லி, கடுகு என பயிர் செய்யும்போது, தென்னை மரங்களை வரப்புப் பயிராக நட்டு வைப்பார்கள். அதுவாக வளரட்டுமே என்று நெல் நட்ட வயல் பரப்புகளிலும் நட்டார்கள்.

பயிர்களுக்குப் பாய்ச்சிய தண்ணீரை தானுண்டு நல்ல இளநீரையும், தேங்காய்களையும் தந்தது தென்னை. இளநீர், தேங்காய் விற்றுக் கிடைத்த தொகையில் உரம் வாங்கிப் போட்டு தோட்டப் பயிர்களை வளப்படுத்தி, சிரமமின்றி சங்கிலித் தொடர் போன்று வருமானம் பார்ப்பவர்கள் இன்றும் உள்ளனர். பயிர்களுக்குப் பாய்ச்சிய தண்ணீரையும், கொடுத்த உரத்தையும் எடுத்து வளர்த்து குலை குலையாக இளநீரும், தேங்காயும் தந்து தோட்டத்து உரிமையாளரை உயர்ந்து நிற்கச் செய்தது தென்னை.

தென்னை மரத்தில் பழுத்து விழுந்த மட்டை ஓலைகளை சேர்த்துக் கட்டி மரங்களில் சாய்த்து குத்தலாக வைத்தார்கள். அறுவடையான தேங்காய்களை கொட்டகைகளில் போட்டு வைத் தார்கள். வேளாண்மை வேலை கள் ஓய்ந்த நேரத்தில் குடும்பமாக உட்கார்ந்து கீற்று பின்னுவதும், கழிவு ஓலைகளை விளக்குமாறு கிளித்தும் கட்டுக்கட்டாக காயவைத்து கட்டுவார்கள்.

கேரள மாநில கிராமங்களிலும், தமிழ்நாட்டில் கடலூர், கன்னியாகுமரி போன்ற கடலோர மாவட்டங்களில் சிறுவர் முதல் முதியவர்கள் வரை குடிசை தொழிலாக செய்கிறார்கள். பொழுது போக்காகச் செய்யும் தொழில்களால் கைநிறைய காசு பார்க்கிறார்கள். மட்டை, பாளை, கூராஞ்சு (பூமாறு) இவைகளை காயவைத்து கட்டுக் கட்டாக்கி நனையாத இடத்தில் பாதுகாப்பாக வைத்து, மழைக்காலத்தில் அடுப்பு எரிக்கப் பயன்படுத்துவார்கள். திடீர் பணத்தேவை வரும்போது, அறுவடை செய்து கொட்டகையில் போட்டுவைத்த தேங்காய்களை உரித்து மளிகைகடைகளிலும், அதிகம் என்றால் மார்க்கெட்டில் போட்டு பணமாக்கி பணக்கஷ்டத்திற்கு விடுதலை கொடுப்பார்கள்.

ஒவ்வொரு சீசனிலும் விளைந்த கரும்பு வெட்டாமல் விடுபவர்கள் இன்றும் உள்ளனர். கூலி ஆட்களுக்குக் கூட கொடுக்கத் தேறாது என்று, வெங்காயம், தக்காளி இவைகளை அறுவடை செய்யாமல், மாட்டை விட்டு மேய்க்கும் நிலை உள்ளது. மலிந்தாலும் தேங்காய்க்கும், இளநீருக்கும் மார்க்கெட் எப்போதும் உண்டு. தங்கம் போன்று நினைத்த இடத்தில் விற்க முடியும். கஷ்டம் நம் காலத்தோடு போகட்டும். பிள்ளைகள் காலத்தில் தான் பட்ட கஷ்டம் வரக்கூடாது என்று சிந்திக்கத் துவங்கியுள்ளார்கள். தென்னை சாகுபடிதான் கஷ்டத்தில் கைகொடுக்கும் என்று நினைத்து முனைப்புடன் தென்னை நடுகின்றார்கள்.

உலக அளவில் தென்னை சாகுபடியில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. இந்தியாவில் தமிழ்நாடு தென்னை சாகுபடியில் இரண்டாம் இடத்தில் உள்ளது. வருடா வருடம் தென்னை சாகுபடி பரப்பளவு சுமார் 35 விழுக்காடு அளவு பெருகி வருகிறது. தேங்காய்க்கும், இளநீருக்கும் சிறந்த ரகம் திருவையாறு 3 ரக தென்னை, இது ஒரு காலத்தின் கட்டாயக் கண்டுபிடிப்பு. கத்தரிக்காய் போன்று எடை போட்டு தேங்காய் வாங்கும் காலம் வருது. உலக மார்க்கெட்டில் அதிக இளநீர், எடை அதிகம் உள்ள தேங்காய்களுக்கு கிராக்கி அதிகம். இனி நீங்கள் பணக்காரர்கள் தான்.

-டாக்டர் வா.செ.செல்வம்,

தென்னை ஆராய்ச்சியாளர், திருவையாறு-613 204.

82204 59341,

04362 - 260 363, 260 003.






      Dinamalar
      Follow us