/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
இயற்கை விவசாயத்திலும் சாத்தியமாகும் கோவை - 58 ரக நெல்
/
இயற்கை விவசாயத்திலும் சாத்தியமாகும் கோவை - 58 ரக நெல்
இயற்கை விவசாயத்திலும் சாத்தியமாகும் கோவை - 58 ரக நெல்
இயற்கை விவசாயத்திலும் சாத்தியமாகும் கோவை - 58 ரக நெல்
PUBLISHED ON : பிப் 04, 2026

கோவை - 58 ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் அடுத்த, வாழத்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி டி.அருண்குமார் கூறியதாவது:
கருங்குறுவை, கருப்பு கவுனி, சொர்ணமசூரி உள்ளிட்ட பல்வேறு விதமான பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், கோவை- - 58 ரக நெல்லை இயற்கை முறையில் சாகுபடி செய்து வருகிறேன்.
இயற்கை உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்யும் போது, 15 நெல் மூட்டைகள் வரையில் மட்டுமே மகசூல் கிடைக்கும். இதை அரிசியாக மதிப்பு கூட்டி விற்பனை செய்யும் போது, கணிசமான வருவாய் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
இதே ரக நெல்லை, ரசாயன உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்தால், 40 மூட்டைகள் வரையில் மகசூல் பெறலாம்.
நாங்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறி இருப்பதால், ரசாயனங்கள் இன்றி, கோவை - 58 ரக நெல் சாகுபடி செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: டி.அருண்குமார்,95664 75605

