/
இணைப்பு மலர்
/
விவசாய மலர்
/
நுனி கருகல் கட்டுப்படுத்தினால் நெற்கதிர்களில் அதிக மகசூல்
/
நுனி கருகல் கட்டுப்படுத்தினால் நெற்கதிர்களில் அதிக மகசூல்
நுனி கருகல் கட்டுப்படுத்தினால் நெற்கதிர்களில் அதிக மகசூல்
நுனி கருகல் கட்டுப்படுத்தினால் நெற்கதிர்களில் அதிக மகசூல்
PUBLISHED ON : டிச 18, 2024

நுனி கருகல் நோய் கட்டுப்படுத்தும் முறை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், திரூர் நெல் ஆராய்ச்சி மைய தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர் முனைவர் செ.சுதாஷா கூறியதாவது:
பருவமழைக்கு பின், நெல்லில் நுனி கருகல் நோய் தாக்கம் அதிகமாக ஏற்படும். இது, வயலில் அதிக தண்ணீர் தேங்குவது மற்றும் மண்ணில் உப்பு தன்மை அதிகமாக இருந்தாலும் வரும்.
இதனால், நெற்கதிரில், நெல் மணிகள் உருவாவதில் சிக்கல் ஏற்படுத்தும்.
இதை தடுக்க, 2 கிலோ யூரியா, 1 கிலோ துத்தநாக சல்பேட் மற்றும் 100 மில்லி ஒட்டு திரவத்துடன் சேர்த்து வயலில் தெளிக்க வேண்டும்.
பயிர் வளர்ச்சிக்கு ஏற்ப, ஊட்டச்சத்து மற்றும் தட்டுப்பாடு இன்றி நீர் பாசனம் அளிக்க வேண்டும்.
பசுந்தாள் மற்றும் இயற்கை உரங்களை அதிகமாக பயன்படுத்த வேண்டும். மேலும், பசுந்தாள் உரமிடுவதால், மண்ணில் இயற்கையான சத்துகள் சேர வாய்ப்பு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்புக்கு: முனைவர் செ.சுதாஷா,
தாவர நோயியல் துறை உதவி பேராசிரியர்,
திரூர் நெல் ஆராய்ச்சி மையம், திருவள்ளூர்.
97910 15355